முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதனிடையே இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக ஹாங்காங்குக்கு ரூ.200 கோடி அனுப்பியதாக நத்தம் விஸ்வநாதன் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது மகன் அமர்நாத், மைத்துனர் கண்ணன் உள்ளிட்ட மூன்று பேர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்திலும் முன்னாள் தலைமை செயலாளர் ஞான தேசிகனும் விசாரணையில் சிக்கியுள்ளதால் அவரும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக