சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நத்தம் விஸ்வநாதன் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத்திடம் விசாரணை நடைபெற்றது.&>இந்த சோதனையின் மூலம் கரூர் அன்புநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் பணம், நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது என்று சோதனை மற்றும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நத்தம் விஸ்வநாதனின் மகன் தான், கரூர் அன்புநாதனிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்கீரன்,இன்
சனி, 17 செப்டம்பர், 2016
கரூரில் கைப்பற்றப்பட்ட ரூ. 5 கோடி நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது என அதிகாரிகள் தகவல்?
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நத்தம் விஸ்வநாதன் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத்திடம் விசாரணை நடைபெற்றது.&>இந்த சோதனையின் மூலம் கரூர் அன்புநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் பணம், நத்தம் விஸ்வநாதன் குடும்பத்திற்கு சொந்தமானது என்று சோதனை மற்றும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நத்தம் விஸ்வநாதனின் மகன் தான், கரூர் அன்புநாதனிடம் பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்கீரன்,இன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக