
இவர்களது ஆட்சி சாதாரணமானவர்களை பெரும்பாதிப்புள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் நாட்டை சின்னாபின்னமாக்கி சீரழித்துள்ளனர். இவர்களை கேட்க எந்த நாதியும் இல்லை என நினைக்கின் றனர். இவர்களை கேட்பதற்காக நாங்கள் உருவெடுத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.தமிழகத்தில் டிவிக்களும், பத்திரிகைகளும் சூட்கேசை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக எழுதுகிறார்கள். என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.>தற்போதைய தேர்தல் தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் நடக்கின்ற போர். இதில் தர்மத்தின் பக்கம் எங்கள் கூட்டணி. அதர்மத்தின் பக்கம் திமுக, அதிமுக. நீங்கள் தர்மம் வெல்ல வாக்களிக்க வேண்டும். நாதியில்லா இந்த மக்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அதிமுக, திமுக நினைக்கிறது.அவர்களிடம் பணம் வாங்குவதை தவிர்த்து, விரட்டிவிட்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்றார்.வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக