
அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு இரண்டு தொகுதிளில் வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு நிலவரம்:
திருச்சி மாவட்டம்:
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் அதிமுக 3
தொகுதியிலும், திமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்புள்ளதாக
நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் திமுகவுக்கு ஒரு
தொகுதியும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் வெற்றி
வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரியலூர் மாவட்டம்:
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள இரண்டு தொகுதிகளில் திமுகவுக்கு ஒரு
இடமும், பாமகவுக்கு ஒரு தொகுதியில் வெல்லும் நிலை உள்ளதாக கூறுகின்றது
நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு
நாகை மாவட்டம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 2
இடங்களிலும், திமுக கூட்டணி 4 தொகுதியையும் கைப்பற்றும் என
கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் மாவட்டம்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி
பெறும் நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
தெரிவிக்கின்றன. இங்கு அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லை
என்கிறது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு.
தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக இரண்டு
இடங்களில் மட்டும் வெல்லும் எனவும், திமுக 6 தொகுதிகளை கைப்பற்றும் என
கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டும்
அதிமுக வெல்லும் என்றும், மீதமுள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்
வாய்ப்புள்ளாத கூறுகின்றது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு.
கரூர் மாவட்டம்:
கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் அதிமுக 1 தொகுதியில்
மட்டும் வெல்லும் எனவும், திமுக 3 தொகுதியில் வெற்றி பெறும் வாய்ப்பு
இருப்பதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
//tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக