சென்னை தீவுத்திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு நடைபெற்ற பிரசார
பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: சகோதர சகோதரிகளே வணக்கம்..
சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது அதிமுக அரசு எந்த உதவியும்
செய்யவில்லை.
வரலாற்றில் இல்லாத பேரழிவை சந்தித்திருக்கிறீர்கள். இந்த வெள்ளத்தில்
நூற்றுக்கணக்கான பேர் இறந்தார்கள். மக்களே ஒருவருக்கொருவர் உதவிக்
கொண்டனர். வெள்ளத்தை எதிர்த்து போராடிய உங்கள் மன உணர்வை நான்
பாராட்டுகிறேன். மக்களே மக்களுக்காக உதவுகிற நிலைக்கு தள்ளிவிட்டது அதிமுக
அரசு.
வெள்ளத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டபோது அதிமுக அரசு எங்கே போனது? அதிமுக
அரசு கண்ணீரை துடைத்ததா? உதவிக் கரம் நீட்டியதா? வெள்ளம் வந்து 4 மாதங்களான
நிலையில் தொழில் நிறுவனங்களுக்கான காப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. வறட்சி
தாண்டவமாடும் நிலையில் மோடி அரசும் அதிமுக அரசும் என்ன
செய்திருக்கிறார்கள்?
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு வளர்ச்சியும் முன்னேற்றமும்
நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. விவசாய பெருங்குடி மக்கள்
தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நெசவாளர்களும் பெரும் துயரத்துக்குள்ளாகி
இருக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நிலம் கையகப்படுத்தும்
சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்
திருத்தம் கொண்டு வந்தது அதிமுக அரசு. நிலம் கையகப்படுத்த விவசாயிகள்
ஒப்புதல் தேவை என்பதை மாற்றியது அதிமுக அரசு.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகள் உருவாகின. அதிமுக
ஆட்சியில் ஒவ்வொரு தொழிற்சாலையாக தமிழகத்தை விட்டு வெளியேறுகின்றன.
தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதால் வேலை இல்லா
திண்டாட்டாம் ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தராமல் அன்னிய
நாட்டு மீனவர்களை மோடி அரசு பாதுகாக்கிறது
சமூக நலத்திட்டங்களுக்கான நிதி உதவியை மோடி அரசு குறைத்துவிட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி குறைக்கப்பட்டதால் வாழ்க்கையே
கேள்விக்குறியாகி உள்ளது. மோடி அரசின் நடவடிக்கையை கேள்வி கேட்காமல்
நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரிக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம். வெற்று
கோஷங்கள், பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் தரவில்லை. தேர்தல் அறிக்கையில்
சொல்லப்பட்ட உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தமிழகத்தில் செயல்படும் அரசாங்கத்தை தருவோம் என உறுதி அளிக்கிறோம்.
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் உரிமைக்கான அரசாங்கத்தை நாங்கள் தருவோம்.
அதிமுகவுக்கும் பாஜக அரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது. இவ்வாறு
சோனியா பேசினார்.
Read more at: //tamil.oneindia.com
Read more at: //tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக