வியாழன், 5 மே, 2016

சென்னையில் சோனியா ; அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்கிறது

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு : சென்னையில் சோனியாகாந்தி பேச்சு சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் கலைஞர் ஆகியோர் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி பேசியபோது, ‘’சென்னையில் உள்ள மக்கள் பெருவெள்ளத்தால் சிக்கித் தவித்தபோது அவர்களுக்கு அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலைகளுக்கான காப்பீட்டு தொகையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காப்பீட்டு தொகை 4 வாரங்களில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் உறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியபடி காப்பீட்டு தொகை வழங்கப் படவில்லை.
கடன் பிரச்சனையால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.
விவசாயிகளின் நலன் களை மத்திய மாநில அரசுகள் புறக்கணித்துவிட்டன. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன. மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது.
இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல், அ.தி.மு.க. அரசு, மோடி அரசுக்கு ஆதரவுகொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதன்மூலம், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்படிக்கை இருக்கிறது. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவிலக்கை அமல்படுத்துவதில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள உறுதியான நிலைமையானது, முதலமைச்சரையும் தனது நிலையை தெளிவுபடுத்தக்கூடிய கட்டாயத்திற்கு தள்ளியது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி மக்கள் பணி செய்யும். தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம். எனவே, வாக்காளர்கள் பேராதரவு தந்து எங்கள் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து நமது அரசு அமைவதற்கு பேராதரவு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார் நக்கீரன்,in

கருத்துகள் இல்லை: