வியாழன், 5 மே, 2016

அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்களால் ஆட்டம் காணும் மக்கள் நல கூட்டணி!

ன்னை: கருத்து கணிப்பு முடிவுகள், பிரசாரத்தில் சோர்வு போன்றவற்றால் மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் உற்சாகம் குறைந்துள்ளது. மக்கள் நல கூட்டணி மதுரையில் மாநாடு போட்டபோது நகரமே குலுங்கும் அளவுக்கு தொண்டர் படை வருகை தந்தது. தேமுதிக கூட்டணி அமைந்த பிறகு நடைபெற்ற வேடல் மாநாட்டிலும் குறை சொல்ல முடியாத கூட்டம் வந்தது. இருப்பினும் சமீபகாலமாக இக்கூட்டணியின் பிரசாரங்கள், தொண்டர்களிடம் எழுச்சியை ஏற்படுத்த தவறி வருகின்றன.
தனி ஆவர்த்தனம் விஜயகாந்த், வைகோ, முத்தரசன், வாசன் என கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
விஜயகாந்த் சர்ச்சை இப்படி தனித்தனியாக நடத்தப்படும் பிரசாரம் பெரிய வீச்சை கொண்டு சேர்க்கவில்லை. விஜயகாந்த் பேசும் கூட்டங்களில் அடிக்கிறார், உதைக்கிறார் என்பது போன்ற சர்ச்சைகள்தான் வெடிக்கின்றனவே தவிர ஆக்கப்பூர்வமாக எந்த செய்தியும் வெளி உலகத்திற்கு வருவதில்லை.
கச்சேரி களைகட்டவில்லை வைகோ ஆக்ரோஷமாக பேசினால், திருமா அறிவார்ந்த வகையில் பேசுவார், விஜயகாந்த் பஞ்ச் பேசினால், ஜி.ராமகிருஷ்ணன் நயமாக பேசுவார்.. இப்படி ஒரு கதம்பமாக பிரசாரத்தை பார்க்கவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். தனி ஆவர்த்தனம் கச்சேரிக்கு களை கட்டவில்லை
வைகோ முடிவு இது ஒருபுறம் என்றால், கோவில்பட்டியில் போட்டியிடாமல் வைகோ திடீரென சொல்லிக்கொள்ளாமல் விலகிய அதிருப்தி கூட்டணி தலைவர்களிடம் இன்னமும் உள்ளது
வைகோ முடிவு இது ஒருபுறம் என்றால், கோவில்பட்டியில் போட்டியிடாமல் வைகோ திடீரென சொல்லிக்கொள்ளாமல் விலகிய அதிருப்தி கூட்டணி தலைவர்களிடம் இன்னமும் உள்ளது
புறக்கணிப்பு வைகோவின் திடீர் முடிவால் கோபமடைந்த விஜயகாந்த்தும், தனது கட்சி கூட்டங்களுக்கு வைகோவை பேச அழைப்பதில்லை
தொகுதியில் கவனம் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் திருமாவளவன், அங்கு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில், இருப்பதால், அங்கேயே முகாமிட்டு பிரசாரம் செய்கிறார். இதனால் அவரது பிரசாரமும் ஒட்டுமொத்தமாக, ம.ந.கூட்டணிக்கு பயன்தரவில்லை.
கருத்து கணிப்பு இதனிடையே தந்தி டிவி மற்றும் நியூஸ்-7 டிவி சேனல்களின் கருத்து கணிப்புகளில், முறையே, அதிமுக மற்றும் திமுக ஆகியவை அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதும், ம.ந.கூட்டணி தொண்டர்களை உற்சாகம் இழக்க செய்துள்ளது. புதிதாக காலூன்றிய, பாஜக பெறும் வாக்கு சதவீதத்துடன், ம.ந.கூட்டணி போட்டியிட வேண்டிய நிலையில் இருப்பதாக கருத்து கணிப்பு கூறுவதும் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.
பிரசாரம் இவ்விரு கருத்துக்கணிப்புகளிலும், மக்கள் நல கூட்டணி மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்லது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது திராவிட கட்சிகளால் உருவாக்கப்பட்ட பொய் கருத்து கணிப்பு என்று பிரசாரம் செய்யும் நிலைக்கு ம.ந.கூட்டணி தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: