சனி, 13 ஜூலை, 2013

கமலஹாசன்: கிரிக்கெட் ஈடுபாடு தேசப்பற்று அல்ல !

கிரிக்கெட் ஈடுபாடு தேசப்பற்று அல்ல;இந்திய அணி ஜெயிக்க
வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது :கமல் பேட்டி

நடிகர் கமலஹாசன் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 தேசப்பற்று படங்களில் நடிக்க முக்கியத்துவம் அளிக்கிறீர்களே?/>
;தேசப்பற்று என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தா விட்டால் ஆபத்தாகி விடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்று ஆகாது.நான் காந்தியின் ரசிகன். ஆனால் அவரை மகாத்மா என்று அழைத்து தலைக்கு பின்னால் ஒளிவட்டம் இருப்பது போல் சித்தரிப்பதை விரும்பவில்லை. சராசரி மனிதராக இருந்து சாதித்தவர் காந்தி. சாமியாராக, முனிவராக பார்க்க கூடாது சாதாரண மனிதராக இருந்து அர்ப்பணிப்பு உணர்வோடு தேசத்துக்காக பாடுபட்டார். ஹேராம் படத்தை அதற்காகத்தான் எடுத்தேன். நல்ல மனிதராக இருந்து நிறைய சாதித்தவர் அவர்.

விஸ்வரூபம் படப்பிடிப்பை கஷ்டமான லொக்கேஷன்களில் நடத்தி உள்ளீர்களே?;படப்பிடிப்பு லொக்கேஷன்களுக்காக நிறைய ஆராய்ச்சி செய்தோம். ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முயன்றோம். ஆனால் சங்கடங்கள் இருந்ததால் தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியவில்லை. ஆப்கானிஸ்தான் ஜலாலா பாத்தின் 4 ஆயிரம் புகைப்படங்களை பார்த்தேன் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.விஸ்வரூபம் 2 படம் பற்றி? விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முற்பகுதியாகவோ விஸ்வரூபம் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை படம் பார்க்கும் போது விஸ்வரூபம் பட உணர்வுகள் இருக்கும்.இந்தி படம் பண்ணுவீர்களா? சில கதைகள் இருக்கின்றன. தயாரிப்பாளர் தேடுகிறேன்.சுருதி ஹாசனுடன் இணைந்து நடிப்பீர்களா?சுருதி ஹாசன் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. நேரம் அமைந்தால் இணை ந்து நடிப்போம்.

கருத்துகள் இல்லை: