சனி, 13 ஜூலை, 2013

அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

 162 MP க்கள் மீது  கிரிமினல் வழக் குகள் . இவர்களில் 76 பேர், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற் றங்களில்

கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில் நீடிக்க முடி யாது. மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கிரிமினல் வழக்கு களில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக் கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். தண்டனை காலம் முடிந்த பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர் தலில் அவர்கள் போட் டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)இல் கூறப்பட்டுள்ளது. அதே நேரம், பதவியில் இருக் கும் எம்.பி., எம்எல்ஏ.க் களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும் கூட, 3 மாதங்களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது.
அதற் குள் மேல் நீதிமன்றங் களில் அவர்கள் மேல் முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)இல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற வழக் குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் என்.சுக்லா வும், மக்கள் பிரதிநிதித் துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4)இல் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக் கம் மேலோங்க ஊக்கம் அளித்ததுபோல் ஆகி விடும். மேலும், தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனு மதிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோத மானது. எனவே, நீதிமன் றங்களில் தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும் படி உத்தரவிட வேண் டும் என்று மனுவில் அவர்கள் கோரினர்.
நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகி யோர் அடங்கிய டிவி ஷன் அமர்வு இதை விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்க கூடாது. மேல் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடி யாது. தண்டனை விதிக் கப்பட்ட தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த தீர்ப் புக்கு முன்பாக தண் டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந் தாது என்று உத்தர விட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக் கும், கிரிமினல் வழக்கு களில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.
தலைவர்களின் கருத்துகள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பல்வேறு கட்சி தலைவர்கள் கூறிய கருத்து:
கபில்சிபல் (மத்திய சட்ட அமைச்சர்): முத லில் தீர்ப்பை முழுமை யாக படிக்க வேண்டி யிருக்கிறது. அதன் பிறகு, இந்த தீர்ப்பால் அரசி யலில் ஏற்படும் பாதிப் புகளை பார்க்க வேண் டும். தீர்ப்பை மறுபரி சீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உட் பட அனைத்து அம்சங் கள் பற்றியும் அரசியல் கட்சிகள் உட்பட அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு தெரிவிக் கப்படும்.
ரவிசங்கர் பிரசாத் (பாஜ தகவல் தொடர் பாளர்): அரசியலை தூய்மையாக்கும் எந்த நடவடிக்கையையும் பாஜ ஆதரிக்கும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர்): இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் இதை எவ்வாறு கையாள போகின்றன என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
162 எம்.பி.க்கள் பதவிக்கு ஆபத்து
நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 543 பேரில், 162 பேர் மீது நீதிமன்றங் களில் கிரிமினல் வழக் குகள் நடந்து வரு கின்றன. இவர்களில் 76 பேர், 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கக் கூடிய குற் றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 1,460 எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 30 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க கூடியவை. இந்த வழக்கு களில் இவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமை யும் பட்சத்தில் இவர் களின் பதவி உடனடி யாக காலியாகி விடும்.

கருத்துகள் இல்லை: