
தனக்கு சம்மந்தமில்லாத வேறு இரு படங்கள் சொதப்பியதால், தமது படம் பலிகடா ஆக்கப்பட்டுள்ள சோகத்தில் உள்ளார், நடிகர் விஷால். பலிகடா ஆக்கப்பட்டுள்ள படம், மதகஜராஜா. இதற்கு வில்லனாக வந்த இரு படங்கள், கௌதம் மேனனின் நீதானே என் பொன்வசந்தம், மணிரத்னத்தின் கடல்.இந்த இரு படங்களையும் ஜெமினியிடம் இருந்து வாங்கிய விநியோகஸ்தர்கள், மதகஜராஜாவை நஷ்டத்துக்கு ஈடாக கொடுக்க வேண்டும் என்று ஜெமினியை நெருக்க ஆரம்பித்தார்களாம். நொந்து போன ஜெமினி லேப், ராஜாவை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டது.
இந்த இழுபறியில், மதகஜராஜா எப்போது ரிஜீஸ்ஆகும் என்று இன்றுவரை தேதி குறிக்கப்படவில்லை.
சரி. கௌதம் மேனன், மணிரத்னம் படங்களுக்கும் விஷாலுக்கும் என்ன கனெக்ஷன்?
அந்த இரு படங்களையும் வெளியிட்ட ஜெமினி லேப்தான், மதகஜராஜாவை சுந்தர்.சியுடன் சேர்ந்து தயாரித்தது. சொன்னபடி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் சுந்தர்.சி. படத்தை பிசினெஸ் பண்ண பேச்சுவார்த்தை தொடங்கியபோதுதான் வந்தது சிக்கல்.
சுந்தர்.சியின் படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்துவரும் நிலையில், மதகஜராஜா வெளியானால், தமது மார்க்கெட்டுக்கு அதுதான் பொன்வசந்தம் என்பது விஷாலின் நம்பிக்கை. ஆனால், அதற்கு கடல் போல குறுக்கே நிற்கிறார்கள், விநியோகஸ்தர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக