
அதேசமயம், இளவரசனின் கடிதத்தை திருடியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருடியவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஆட்சித் தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ளார் என்றார். டிஎஸ்பி சம்பத் கூறுகையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இளவரசன். இதுதொடர்பாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தன் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ளார். இளவரசன் இறப்பதற்கு முன்பாக அவர் பையில் வைத்திருந்த கடித்தத்தை மர்ம நபர்கள் சிலர் திருடியுள்ளனர். அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கடிதம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக