வியாழன், 11 ஜூலை, 2013

உம்மன் சாண்டி: பதவி விலக முடியாது ! ஊழல் குற்றச்சாட்டில் உண்மை இல்லாயாமே? வளர சத்தியமானு சேட்டா?


சூரிய மின்சக்தி ஊழல் புகாரில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலகக்கோரி அம்மாநிலம் முழுவதும்  இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், கேரள அமைச்சரவை அவசரக் கூட்டத்தை உம்மன் சாண்டி கூட்டினார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தொடரும். கட்சிக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. என் மீது அதிருப்தியும் இல்லை. முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். இதற்காக நான் பதவி விலக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சூரிய மின்சக்தி ஊழல் விவகாரம் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அரசியல் சதி. அதிகாரத்தை விலைக்கு விற்பவன் நான் அல்ல. தற்போது நான் ராஜினாமா செய்தால், தவறு செய்ததாக அவர்கள் கூறுவது உண்மையாகி விடும் என்று தெரிவித்தார்.
முதல்–மந்திரி அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளதாக தெரிவித்த உம்மன்சாண்டி, எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் தோல்வி அடைந்து வருவதாக தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: