திங்கள், 8 ஜூலை, 2013

பூவோடும் பொட்டோடும் சாகவேண்டும் என ஒரு சாபத்தை தமிழ் பெண்கள் மீது

கடவுள்களும்,  தேவர்களும், தேவேந்திரன்களும்,  மன்னர்களும், அரேபியர்களும்  மங்கைகளுடன்   ‘கலவி’யில்  திளைத்து   நாளும்  மகிழலாம்..    என்னடா  கொடுமையிது..?     புருசனுடன்    ‘பூவோடும்  பொட்டோடும்’   வாழ்ந்து    சாகவேண்டும்  என  ஒரு  சாபத்தை   தமிழ் பெண்கள்  மீது  போட்டு வைத்துள்ளார்கள்.
இந்த  நடைமுறையை   கட்டாயம்   மாற்றவேண்டும்.   வினையன்கள்,   பஞ்சமிகள்,  கஞ்சனுகள், ஆவேசங்கள்,  மடமைகள்,  கிரிமினல்கள்,  போக்கிரிகள், சுத்துமாத்துகாரர்கள்,  பெண்களை  பாலியல்  ரீதியாக, மனரீதியாக  துன்பப்படுத்துபவர்கள்,  பெண்களை  சந்தோச  படுத்த  முடியாதவர்கள்   போன்ற   பேர்வழிகளில்   ஒருவரை   ஒரு  தமிழ்பெண் (ஆண்) மணந்தால்   அவருடன்  வாழ்க்கை   பூராக  வாழவேண்டுமா?  அதேபோன்று  ஒரு  ஆணை  திருப்திபடுத்தமுடியாத  ஒரு  பெண்ணை   காலம்  முழுவதும்  கட்டிக்கிட்டு  நமக்கு  கிடைத்த  அற்புதமான  வாழ்க்கையை  அர்ப்பணிக்கவேண்டுமா?
‘மனைவி  என்பவள்   மனசாலும்   உடலாலும்    மனைவியாக  இருக்கவேண்டும்.
பேருக்கு  தாலிக்கொடியை  கட்டிக்கிட்டு  மனசுக்குள்  வேறோருவனை  அல்லது  பலபேரை  சுமந்துகொண்டு  திரிகின்ற   பெண்கள்  நிறையபேர்  இருக்கின்றார்கள்.  இவர்களை   கட்டுப்படுத்துவது   சமூதாய  பயமே  ஒழிய  வேறொன்றுமில்லை.     புருசன்   பிடிக்காவிட்டால்   வேறொருவனுடன்   ஓடிபோகின்றவள்  மேலானவள்.
கஜுராஹோ  சிற்பங்களை  பார்க்கின்றபோது   என்னதெரிகின்றது?
கஜுராஹோ சிற்றின்ப  சிற்பங்கள்  காமசூத்திர  விளையாட்டின்   கவர்ச்சி  கரமான  ‘சிற்றின்பக்  கலையின் உச்சநிலை’ என விவரிக்கின்றது.  ‘வளைந்த, அகன்ற  இடுப்பும்   பெருத்த மார்புகளையும்  கொண்ட கவர்ச்சிகரமான மங்கைகள்  தங்கள்  தாராளமான  உடலமைப்பு  மற்றும்  அணிகலன்பூட்டிய  உடல்களை  நேர்த்தியாக செய்யப்பட்ட   வெளிப்புற சுவர் முகப்புகளில் காட்சிப்படுத்துகிறார்கள்.
இந்தச் சதைப்பிடிப்பான அப்ஸரஸ்கள் கற்களின் மேற்பரப்பெங்கும் ஆரவாரமாக, முகப்பூச்சு செய்கிறார்கள், முடிகளை உலர்த்துகிறார்கள், விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், மற்றும் ஓய்வில்லாமல் தங்கள் அரைக்கச்சைகளை பின்னுவதும்  அவிழ்ப்பதுமாக இருக்கிறார்கள்… தேவலோக  கவர்ச்சி மங்கைகள் தவிர, நெருக்கமான   முறைவரிசையிலான   கிரிஃப்பின்கள்,  பாதுகாவல்  தெய்வங்கள்  மற்றும்  மிகவும்  பழியார்ந்த, வரம்புமீறி பின்னிப்பிணைந்த  மைதுனாக்கள் , அல்லது  காதல்புரியும் இணைகள் இருக்கின்றன.’
கஜுராஹோ சில குறிப்புகள்
இந்தியாவின்  ‘காதல் கோயில்’ எனப்படுவது  எது தெரியுமா? இந்தியாவின்  மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில்தான் அது. ‘பண்டேல்கந்த்’ என்கிற கிராமத்தில் கஜுராஹோ அமைந்துள்ளது. பண்டேல்கந்த் என்பது சின்னஞ் சிறிய கிராமம். ஆனால் அந்த கிராமத்தில்  ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்  மட்டுமே ஆறு இருக்கின்றன. நாள்தோறும்  கோயிலைக் காண வந்து குவியும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்காகவே மேலும் ஏராளமான ஆடம்பர ஹோட்டல்களும் இங்கு உண்டு.
கஜுராஹோ ஒருகாலத்தில் சன்தேளர்கள் வம்சத்து மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இல்லையில்லை, இதைக் கட்டியது  எந்த மன்னர் பரம்பரையினரும் அல்ல. சிற்பக்கலையில்  வல்லுனர்களான சன்தேளர்கள் என்பவர்கள்தான்  இந்தக் கோயிலை  நிர்மாணித்தவர்கள்  என்றும்  சொல்லப்படுவதுண்டு.
அவர்கள் யாராக இருந்தாலும் சன்தேளர்களின் காலம்வரை கஜுராஹோ நகரம் ஒரு புனிதத்தலமாகவே நீடித்தது. அதன்பின் வந்தவர்களால் தலைநகரம் மாற்றப்பட்டு கஜுராஹோ கைவிடப்பட்டது. காலப்போக்கில் மரம் செடிகொடிகள் சூழ்ந்த வனாந்தரப் பிரதேசமாகிப்போனது. அது இவ்விதம் காடாகிப் போனதால்தான் பின்னாளில் முகலாயர்கள் இந்துக் கோயில்களை அழித்தபோது அவர்கள் கண்களில்படாமல் தப்பித்தது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டிஷாரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகின் பார்வைக்கு வந்தது.
19வது நூற்றாண்டில் கஜுராஹோவில் 80க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இப்போது மிச்சமிருப்பவை 22 கோயில்கள் மட்டுமே. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கஜுராஹோ 800 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஏறத்தாழ 13ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்றாலும் 19வது நூற்றாண்டின் இறுதிவரை சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகளோ சிறப்புகளோ தெரிந்திருக்கவில்லை. இந்தக் கோயிலின் சிறப்பை உலகத்துக்கு முதன் முதலாக எடுத்துச் சொன்னவர் ஒரு தொல்லியல் நிபுணர். அவர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். அதன் பிறகே சுற்றுலாப் பயணிகளின் கவனம் கஜுராஹோ பக்கம் திரும்பியது.
கஜுராஹோ என்றாலே பாலியல் சம்பந்தப்பட்ட சிலைகள் மட்டுமே இருக்கும் என்று எண்ணினால் அது மிகவும் தவறு. அங்கே உள்ள 22 கோயில்களில் நான்கு அல்லது ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான சிற்பங்கள் இருக்கும். மற்ற கோயில்களில் ஆன்மிகம் சம்பந்தமான சிலைகளே அழகுற அணிவகுத்துள்ளன.
அதுபோலவே பெரும்பாலானோர் நினைப்பதுபோல கோயில்களின் சன்னிதிகளில் பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் சுற்றுப்புறச் சுவர்களிலும் ஆங்காங்கு உள்ள அடிப்பகுதி கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்களும் கடவுள்கள், தேவர்கள் சம்பந்தமானது இல்லை. சாதாரண எளிய மனிதர்களே தினப்படி வாழ்க்கையின் நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்பட்டு செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிலைகளில் பெரும்பாலும் தாசிகளே உள்ளதாக சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ள நகைகள், தாலிகள் போன்றவற்றைக் கொண்டு ஊகித்திருக்கிறார்கள். தாசிகளைச் சுற்றி தோழியர்களும், பாணர்களும் நட்டுவனார்களும் கூட ஆடல்கலைகளில்  ஈடுபடுவது போன்ற சிற்பங்கள்  ஏராளமாக உள்ளன. தவிர அவர்கள்  நீராடுதல், ஒப்பனை செய்துகொள்ளல், ஆடைகளைக் களைவது, மாற்றுவது போன்ற செயல்கள் எல்லாம் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் காமசூத்திரக் காதல் கலைகளை சிற்பங்களாக வடித்து கோயிலில் நிறுவியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ இந்த சிற்பங்களைக் காண நமது இந்தியத் தம்பதிகள் பெரிய அளவில் வராவிட்டாலும் உலகின் பல பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டவரும் ஜோடி ஜோடியாகத் திரண்டு வந்து கோயில்களைப் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படி வரும் அயல்நாட்டவர்களால்தான் அந்த ஊரில் வாழ்பவர்கள் வறுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பது மிக உண்மை.
கஜுராஹோ  கோவில்கள் மணற்கல்லால் செய்யப்பட்டுள்ளன. கற்கள்   மோர்டிசே மற்றும் டேனன் மூட்டுகள் இணைந்து வைக்கப்பட்டுள்ளன. கஜுராஹோவின் இந்த கோவில், மிகவும் தத்ரூபமாகவும் மிகவும் நுட்பமான முறையில் இச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மணல் கற்கள்  ஒவ்வொன்றும் 20 டொன்கள் நிறையுடையவையாக காணப்படுகின்றது.
இங்கே கஜுராஹோவில் உள்ள மற்றைய கோயில்கள் அனைத்திலும் சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் தனித் தனி கோயில்கள் உள்ளன. தவிர முருகன், அனுமான், கிருஷ்ணன், பார்வதி, லட்சுமி போன்ற கடவுள்களும் இங்கு குடிகொண்டுள்ளனர். இப்படி எல்லா தெய்வங்களுக்கும் கோயில்கள் உள்ளதால் இங்கு வருடம் முழுக்க திருவிழாக்கள் நடந்தபடி இருக்கின்றன.
இந்தக் கிராமத்தில் உள்ள பல இளைஞர்கள் வெளிநாட்டவர்களுக்கு கைடுகளாகப் பணியாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்கள் படிப்பு வாசனையே அறியாதவர்கள் என்றாலும் கஜுராஹோ கோயிலைப் பார்க்க வரும் பலதரப்பட்ட வெலிநாட்டினரிடம் பழகிப் பழகி ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி, சீன மொழியென்று பல மொழிகளையும் அனுபவ ரீதியாகக் கற்றுக்கொண்டு அசத்துகிறார்கள். இப்படி கைடுகளாக பணியாற்றுபவர்களுக்கு ‘லப்கா’ என்று பெயர்.
அழகிய சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற கஜுராஹோவுக்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? அதன் பண்டையக் கால ‘லவானியா’ மொழியில் ‘கஜுர்’ என்றால் பேரீச்சம்பழம் என்றும் ‘ரஹோ’ என்றால் தங்கம் என்றும் அர்த்தம். ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் விளைந்த பேரீச்சம் பழங்கள் தங்கம் போன்ற நிறத்தில் இருந்ததால் இப்பிரதேசத்துக்கு கஜுராஹோ என்று பெயர் வந்ததாம்.
உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் மதிக்கப்படுவதைப் போல, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கஜுராஹோ போற்றப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோயிலுக்குள் காலை பத்து மணிக்கு உள்ளே நுழைந்தால் மாலை ஐந்து மணிக்குத்தான் வெளியே வருகிறார்களாம்.

ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: