வெள்ளி, 12 ஜூலை, 2013

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் ஆகவேண்டியவர்கள்

டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ,எம்.பிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பின்படி நாட்டில் 30% எம்.எல்.ஏ, எம்.பிகள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை தொகுத்துள்ளன. அதே போல http://myneta.info இணையத்தளம் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி.யின் சொத்து விவரம், குற்ற வழக்கு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் மாநிலங்கள் மற்றும் கட்சிகள் வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தாக்கல் செய்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்படி 14% எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்மீது 'மிகக் கடுமையான' குற்றங்களின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்..
லோக்சபாவின் 543 எம்.பிகளில் 162 பேர் அதாவது 30% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 4,032. இதில் 1,258 பேர் அதாவது 31% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 15% எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றன
நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம்தான் அதிக கிரிமினல் எம்.எல்.ஏக்களைக் கொண்ட மாநிலமாக ‘திகழ்கிறது'. 2009 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏக்களில் 74% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
இதேபோல் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏக்களுக்கும் ‘கிரிமினல்' வழக்கு வாங்கியதில் ‘நல்ல' இடம்! பீகார் மாநிலத்தில் 58 எம்.எல்.ஏக்கள், உத்தரபிரதேசத்தில் 47% எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்கள்.
கட்சிகளைப் பொறுத்தவரையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் அதிக கிரிமினல்களைக் கொண்டதாக இருக்கிறது. அக்கட்சியின் 82% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அடுத்தபடியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 64% கிரிமினல் எம்.எல்.ஏ, எம்.பிக்களையும் சமாஜ்வாடி கட்சி 48% எம்.பி, எம்.எல்.ஏக்களையும் கொண்டிருக்கிறது
தேசிய கட்சிகளில் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் காங்கிரஸை வென்றுவிட்டது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் 31% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.. காங்கிரஸில் இது 21%தானாம். அதாவது பாரதிய ஜனதா கட்சியின் 1017 எம்.பி, எம்.எல்.ஏக்களில் 313 பேர் மீதும் ங்கிரஸ் கட்சியின் 1433 எம்,பி, எம்.எல்.ஏக்களில் 305 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றனவாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: