
சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது. ஓட்டுப்போட உரிமையுள்ளவர் மட்டுமே, தேர்தலில் போட்டியிட முடியும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும், ஓட்டுப் போடும் உரிமையை இழந்து விடுகின்றனர். அதனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் பிரிவு, 4 மற்றும் 5ல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோருக்கான தகுதி பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று, தேர்தலில் போட்டியிடுபவர், வாக்காளராக, அதாவது ஓட்டுப் போட தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்பது. அதே சட்டத்தில், பிரிவு, 62 (5)ல், "ஒருவர் குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது போலீஸ் காவலில் இருந்தாலோ, அவர் எந்தத் தேர்தலிலும் ஓட்டுப் போட முடியாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே சரியானது. "ஓட்டுப் போட உரிமையில்லாதவர், வாக்காளர் அல்ல. அதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது' என, பீகார் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரியானதே. அதில், எந்த குறைபாடும் இல்லை. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக