
எமிஜாக்சன், விக்ரமுடன் ‘தாண்டவம்’ படத்திலும் நடித்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் ராம்சரன், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘யவடு’ படத்தில் எமி ஜாக்சன் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு லண்டனில் நடந்தது. எமிஜாக்சன் காரில் பயணம் செய்வது போன்ற காட்சியொன்றை படமாக்கினர். காரை டிரைவர் வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு காருடன் பயங்கரமாக மோதியது. இதில் காருக்குள் இருந்த எமிஜாக்சனுக்கு பலத்த அடிபட்டது. உடலில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் விரைந்து சென்று எமி ஜாக்சனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக