ஞாயிறு, 7 ஜூலை, 2013

தே.மு.தி.க., தலைமையில் புது அணி ? சுப்ரமணியசாமி working overtime

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தே.மு.தி.க., தலைமையில், பா.ஜ., கொங்கு முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை, அகில இந்திய ஜனதா கட்சியின் தலைவர், சுப்ரமணியசாமி வகுத்துள்ளார். பா.ஜ.,வுடன் ஜனதா கட்சியை இணைத்த பின், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு  போட்டியாக, புது அணி உருவாக்கும் பணி துவக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மீது அதிருப்தி:ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல், காங்கிரஸ் "கை'யை விரித்து விட்டதால், அக்கட்சியின் மீது தே.மு.தி.க., அதிருப்தி அடைந்துள்ளது. காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்ட தே.மு.தி.க.,வை பா.ஜ., பக்கம் இழுப்பதற்கான வியூகத்தை, ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் சு.சாமி வகுத்துள்ளார்.ஜனதா கட்சியை வெகு விரைவில் கலைத்து விட்டு, அக்கட்சியை பா.ஜ.,வுடன் இணைக்க, சு.சாமி தயாராகி விட்டார். இணைப்பு விழா முடிந்ததும், தமிழக அரசியலில் சுப்ரமணியசாமி தீவிரம் காட்ட இருக்கிறார். இவரு அடிச்சிட்டு உலருவாறு. அவர் அடிக்காமலே உலருவாறு.
கடந்த 15 ஆண்டுகளாக, லோக்சபாவுக்குள் எம்.பி., என்ற முறையில் செல்லவில்லை.அடுத்த லோக்சபா தேர்தலுக்குள், தமிழகத்தில் புது அணியை உருவாக்கி, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாக வேண்டும் அல்லது குஜராத் மாநிலத்திலிருந்து முதல்வர் நரேந்திர மோடியின் ஆதரவால், ராஜ்யசபா எம்.பி.,யாக வேண்டும் என்பதில் சு.சாமி உறுதியாக இருக்கிறார்.இதற்காக, தமிழக அரசியலில் அணி மாற்றும் வியூகங்களை, சு.சாமி வகுத்துள்ளார். அவரது வியூகத்திற்கு, தமிழக பா.ஜ., இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற சில கட்சிகள் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன. பா.ஜ., அணியில்...:இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், தே.மு.தி.க., தலைமையில் கூட்டணியை ஏற்றுக்கொள்ள பா.ஜ., தயாராக உள்ளது. ஏற்கனவே, பா.ஜ., அணியில் இந்திய ஜனநாயக கட்சி இடம் பெற்றுள்ளது. கொங்கு முன்னேற்ற பேரவை உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு புதிய அணியை உருவாக்கலாம் என சுப்ரமணியசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கருதுகின்றனர்.<பிரதமர் வேட்பாளர் :

தே.மு.தி.க.,வுக்கு ஏற்கனவே 10 சதவீதமும், பா.ஜ.,வுக்கு 2 சதவீதம் ஓட்டுகளும் உள்ளன. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்றால், அவருக்கு உள்ள செல்வாக்கின்படி கூடுதலாக பா.ஜ.,வுக்கு 4 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும்.இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற சில கட்சிகளுக்கு, தலா 2 சதவீதம் என, மொத்தம் 4 சதவீதம் கிடைக்கும். ஆக மொத்தம், 20 சதவீத ஓட்டுகள், தே.மு.தி.க., அணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.லோக்சபா தேர்தலில், சில தொகுதிகளில் தே.மு.தி.க., அணி கைப்பற்றி, 20 சதவீத ஓட்டுகளை தக்க வைத்துக் கொண்டால், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தே.மு.தி.க.,வுக்கு கைகொடுக்கும். லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டால், தேர்தல் செலவை சமாளிக்க முடியாது. அக்கட்சியின் 10 சதவீத ஓட்டுகளும் குறைவதற்கு தான் வாய்ப்பு இருக்கும்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை: