அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ரவுடி
ரத்தோர் படம் இரண்டு நாளில் ரூ.29.80 கோடி வசூலாகியுள்ளது. தமிழில் சிவா
இயக்கத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம் நடிப்பில் வெளியாகி
சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சிறுத்தை. அத்தோடு வசூலையும் வாரி குவித்த
படம் இது. இப்படம் இப்போது இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் வெளியாகி
இருக்கிறது. கார்த்தி வேடத்தில் அக்ஷ்ய் குமாரும், தமன்னா வேடத்தில்
சோனாக்ஷி சின்ஹாவும் நடித்து இருந்தனர். பிரபுதேவா இப்படத்தை இயக்கி
இருந்தார். ரூ.45 கோடி செலவில் உருவான இப்படம் இந்தியா முழுக்க 2500
தியேட்டர்களில் வெளியானது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. முதல்நாளில் இந்தியா முழுக்க ரூ.15.10 கோடி வசூலான இப்படம், இரண்டு நாளில் மொத்தம் ரூ.29.80 கோடி வசூலை எட்டியுள்ளது. இதனால் பிரபுதேவா, அக்ஷ்ய் உள்ளிட்ட ரவுடி ரத்தோர் படக்குழுவே உற்சாகத்தில் இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக