ஞாயிறு, 3 ஜூன், 2012

பெண் சிசுக் கொலை..சீனா, இந்தியா மீது US குற்றச்சாட்டு

 கருவில் இருக்கும் குழந்தை பெண்ணா என்பதைக் கண்டறிந்து அதைக் கலைப்பதைத் தடை செய்ய ஒருபுதிய சட்டம்  அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
 http://www.rediff.com/news/1999/mar/08woman2.htm
குழந்தை பிறப்பதற்கு முன் பால்வேற்றுமை பாகுபாடு தடைச் சட்டம் என்ற பொருள் கொண்ட காங்கிரஸ்காரர் டிரென்ட் ஃபிராங்கிளின் (இவர் ஒரு மருத்துவர் ஆவார்) அறிமுகப் படுத்தினார்.  கருவைக் கலைப்பதற்கு அக் குழந்தை பெண்ணாக இருக்கிறது என்பது மட்டுமே காரணம் என்று மெய்ப்பிக்கப்பட்டால், அக்கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண் டனை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

பாலியல் வேற்றுமை காரணமாக செய்யப்படும் கருக்கலைப்பு அமெரிக்காவில், குறிப்பாக ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய மக்களிடம்,  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று ஃபிராங்கிளின் கூறினார்.
கன்னடிகட் பல்கலைக் கழகத்தில் மேற்கொள் ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன, இந்திய, கொரிய மக்களிடையே இவ்வாறு கருவிலேயே பெண் குழந்தைகளை அழிப்பது தெரியவந்துள்ளது.
கலிபோர்னியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுனிதா பூரி உள்ளிட்ட ஆய்வாளர்கள் அமெரிக் காவில் குடியேறிய 65 பெண்களை நேர்கண்ட போது,  அவர்களில் 40 விழுக்காடு பெண்கள் பிறக்காத பெண் குழந்தைகளின் கருவை வேண்டு மென்றே அழித்துள்ளனர். தற்போது பெண்குழந் தைகளின் கருக்களைச் சுமந்து கொண்டிருக்கும் 90 விழுக்காடு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புகின்றனர்  என்று ஃபிராங்கிளின் கூறினார்.
ஒரு பெண் குழந்தை நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது; அதை நாம் கொண்டாடு கிறோம். ஆனால், நம் நாடு உள்ளிட்ட பல நாடுகளில் பெண்ணாக இருப்பது மரண தண்டனை அளிக்கப்படுவதற்காகவே என்ற நிலை நிலவுகிறது. சீனாவிலும், இந்தியாவிலும் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறக்காமலேயே கருவிலேயோ அல்லது பிறந்த உடனேயோ இறந்து போகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இந்த சட்ட மசோதாவை பலர் எதிர்க்கவும் செய்கிறார்கள். பெண்களின் உரிமைகளைப் பறிப்பதாகும் இது என்று பெண் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இச்சட்டம் காரணமாக மருத்து வர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இனவாரி யாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறு கருவிலேயே பெண் குழந்தைகளை அழிப்பதற்கு தடை விதித்து சட்டங் களை இயற்றி, நடைமுறைப்படுத்தி, அதன்படி தண் டனைகள் வழங்கப் படுகின்றன. ஆனால், பெண்கருவை, பெண் சிசுவை அழிப் பதைத் தடுப்பதற்கு அமெரிக்காவில் எந்த ஒரு சட்டமுமே இல்லை என்று அவர் கூறினார்.
பெண் கருவைக் கலைப்பது குற்றமாகக் கருதப் படும் நாடுகளிலிருந்து பெண்கள் கலைப்பதற் காகவே அமெரிக்காவிற்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் அனுமதிக்கப்படுவதே இதன் காரணம்.  அதனால் பெண்கருவைக் கலைப்பவர் களுக்கு அமெரிக்கா சிறந்த இடமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: