வியாழன், 7 ஜூன், 2012

பாண்டியனின் கடல்கடந்த அரசியல் விபசாரம்


இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!அதிமுகவை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிடுட்டுள்ள அறிக்கையில்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் அரசியல் நாகரீகப்படி அத்தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.ஆனால் அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை பொது வேட்பாளராக கருதி ஆதரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.


அந்த அளவிற்கு சுயமரியாதையை பெருந்தன்மையோடு ஆளும் கட்சிக்கு விட்டுக்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனும், நல்லக் கண்ணுவும் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியுள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிù பற்று துர்மரணம் அடைந்த முத்துக்குமரனின் மனைவி, குழந்தைகளையும் சந்திக்க வைத்திருக்கின்றனர்.
இதெல்லாம் அவர்கள் கட்சிப் பிரச்சனை. ஆனால் தா.பாண்டியன் தேவையில்லாமல் ஈழத் தமிழர் சாவோடு என்னைத் தொடர்பு படுத்து ஏன் பேச வேண்டும்? (ஈழத் தமிழருக்கு திமுக செய்துள்ள செயல்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளார்).
இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, அதைத்தடுத்து நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சிகளால் பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் ராஜபக்சேவிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். திமுகவின் அழுத்தத்தின் விளைவாக ராஜபக்சே அரசு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது.
இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: