“நாட்டியம் ஆடிய ஜெயலலிதாவுக்கு, ஒரு ஆணைப் பார்த்து பேச தெரியாதா?
Viruvirupu
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தமக்கு சவால் விட்டதற்கு, ஒரு
ஸ்பெஷல் டச் கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். “ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண்
எப்படி பேசவேண்டுமோ, அப்படித்தான் சட்டசபையிலும் பேசவேண்டும்” என்பதே
விஜயகாந்த் கொடுத்துள்ள ஸ்பெஷல் டச்.
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, “திராணியிருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்டுப் பாருங்கள்” என்று விஜயகாந்துக்கு சவால் விட்டதும், விஜயகாந்த் பதில் கூறும்போது கையை நீட்டிப் பேசினார், நாக்கைத் துருத்திப் பேசினார் என்று காரணங்கள் கூறி, அவரை சட்டமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்ததும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த விவகாரம், அதன் தொடர்ச்சி.
சட்டமன்றத்தில் இவர்கள் மோதிக்கொண்டது, வெவ்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு மாதிரி தெரிந்தது நிஜம். அ.தி.மு.க.-வினருக்கு, விஜயகாந்த் பேசிய பாணி, அ.தி.மு.க.-வினருக்கு ‘தெய்வக் குற்றமாக’ தெரிந்திருக்கும் என்பது உண்மை. காரணம், கட்சியில் சேர்ந்த நாளில் இருந்தே அவர்கள் அப்படி பழக்கப்பட்டு விட்டவர்கள்.
ஜெயலலிதாவுடன் ஒரு வார்த்தை பேசுவதென்றாலும், கைகட்டி, வாயில் கை வைத்து பவ்வியமாகதான் பேசுவார்கள். கொஸ்ஷன் மார்க் போன்ற பாசிஷனில் முதுகு இருக்க வேண்டும். கண்களை உயர்த்திப் பார்க்க கூடாது. பேசி முடிந்து வெளியேறும்போது, ‘உத்தரவு வாங்கிக்கிறேங்க’ என்று சொல்லியபடி, குனிந்த பாசிஷனிலேயே, பின்புறமாக செல்ல வேண்டும்.
அப்படியே பழகியவர்களுக்கு, விஜயகாந்த் கை நீட்டி பேசியது மகா அதிர்ச்சியாகதான் இருக்கும். இதனால், விஜயகாந்தை சட்டமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்ததில் அவர்களைப் பொறுத்தவரை சரியான காரியமே. தமிழகத்தில் இருந்தே சஸ்பென்ட் செய்திருக்க வேண்டும் என்றுகூட சொல்லப்கூடும்.
அதே நேரத்தில், கொஸ்ஷன் மார்க் அமைச்சருக்கு வெளிநாட்டில் பிறந்த ஒரு பேரன் இருந்தால், தாத்தாவின் அங்க சேஷ்டைகளை பார்க்க கேவலமாக தெரியலாம். இதெல்லாம் அவரவர் சொந்த விவகாரம். ஜீனில் உள்ள குணாதிசயம்.
இப்போது, அதே விவகாரத்தை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்திலும் இழுத்திருக்கிறார் விஜயகாந்த். அ.தி.மு.க.-வினரின் கோணத்தில் விஜயகாந்த் பேசியது மகா குற்றம். விஜயகாந்தின் கோணத்தில், ஜெயலலிதா பேசிய பாணி, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
“சட்டமன்றத்தில் ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் எப்படி பேசவேண்டுமோ அப்படித்தான் பேசவேண்டும். ஆனால், ஒரு பெண் என்னை நோக்கி நாகரிகமில்லாமல் பேசுவதால் நான் எப்படி அங்கு (சட்டசபைக்கு) செல்ல முடியும்? சட்டசபையில், நாங்கள் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசும்போது, எங்களை கூண்டோடு வெளியேற்றுதை வழக்கமாக கொண்டிருப்பதால் நான் எப்படி அங்கு வரமுடியும். அதனால்தான் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்” என்று பேசியிருக்கிறார் விஜயகாந்த்.
“மத்திய அரசு பெட்ரோல் விலையில் ரூ. 8 உயர்த்தி, அதில் ரூ. 2-ஜ குறைத்ததை ‘கண்துடைப்பு நாடகம் என கூறும் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி அதில் சிறிதளவு குறைத்தாரே.. மத்திய அரசு செய்தது நாடகம் என்றால், ஜெயலலிதா செய்தது என்ன நாட்டியமா?” என்றும் கேட்டிருக்கிறார்.
சேலம் மாநாட்டில், எனது கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அ.தி.மு.க.-வுடன் கூட்டணி வைத்தேன். நான் தலைகுனிந்தாலும், மக்களை தலை குனிய விடமாட்டேன். என்னைப் பார்த்து திராணி இருக்கிறதா என்றும் கூறும் முதல்வர், கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற 5 இடைத் தேர்தல்களில் வேட்பாளரை நிறுத்தினாரா? இங்கே தேர்தல் நடக்கும்போது, அதை புறக்கணித்துவிட்டு கொடநாடு சென்றது யார்? என்றும் போட்டுத் தாக்கியிருக்கிறார்.
அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு ரத்தம் கொதிக்க வேண்டுமே, பதிலடி கொடுப்பார்கள், இருந்து பாருங்கள்.
சட்டசபையில் கைகட்டி வாய் பொத்தி கூனிக்குறுகி ஜெயாவின் முன் பேசவேண்டும் இது கூட தெரியாததுகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக