கமல்
நடித்து இயக்கியுள்ள ’விஸ்வரூபம்’ படத்தின் ரிலீஸுக்கான அனைத்து
வேலைகளும் முடிந்துவிட்டது. இதையடுத்து கமல் தனது அடுத்த படமான ‘அமர் ஹை’
பற்றி அறிவித்திருந்தார்.
இப்படத்தை
பற்றி கமல் பேசும்போது, ”அரசியலில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு
இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கதை இது. கதையில் சில
மாற்றங்களை மட்டும் இப்போது செய்திருக்கிறேன். படத்தை தமிழிலும்,
இந்தியிலும் ஒரே சமயத்தில் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்” என்று
கூறியிருந்தார்.
இந்தியிலும்
படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் ஏதாவது ஒரு முக்கிய இந்தி நடிகர்
படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு அப்போதே இருந்தது. இந்த
சந்தேகம் நாளடைவில் ’அமர் ஹை படத்தில் நடிக்க ஷாருக்கான், சல்மான்கான்,
ஜாக்கி சான் ஆகியோருடன் கமல் பேசிவருகிறார்’ என்று உறுதியாக
பேசப்பட்டுவந்தது.
இந்நிலையில்,
“ பரவுவதற்கு உதவியே தேவையில்லாதவை வதந்திகள். பாலிவுட்டில் என் படம்
விற்பனையாக ஷாருக்கான், சல்மான்கான் ஏன் ஜாக்கிசான், டாம் க்ரூஸ்
போன்றவர்களின் உதவி கூட எனக்கு தேவையில்லை. நான் உலகறிந்த நடிகனாக
உருவாகியிருக்கிறேன்.
நான் இணைந்து நடிக்க ஆசைப்படும் ஒரே நடிகர் திலீப் குமார் மட்டும் தான்” என்று கூறியுள்ளாராம் கமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக