திங்கள், 4 ஜூன், 2012

மம்தா:என்னைப் போல் எந்த முதலமைச்சருக்காவது தைரியம் உள்ளதா?

மேற்கு வங்காளம், ஜூன் 1-மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் 2 ஆவது முக்கியமான கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பெட்ரோல் விலைகுறைப்பு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பாரகன்ஸ் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில்,
மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து முதன் முதலாக நாங்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நான் வீதியில் இறங்கி போராடியது போன்று வேறு முதலமைச்சர்கள் யாருக்கும் எதிர்க்க தைரியம் உள்ளதா? பெட்ரோல் விலையை முழுமையாக குறைக்க டில்லியில் போராடவும் நான் தயாராக உள்ளேன்.` என்றார்

கருத்துகள் இல்லை: