செவ்வாய், 5 ஜூன், 2012

தஸ்லிமா கண்டனம் சன்னி லியோனை தலையில் வைத்து ஆடுவதா?



ஆபாச நடிகை சன்னி லியோனை தலையில் வைத்து கொண்டாடுவதா என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Taslima Nasreen Slams Porn Star Sunny Leone வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன். பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் அவர் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து பூஜா பட் தனது படமான ஜிஸ்ம் 2ல் சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஆபாச நடிகையான அவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார். இது எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ஒரு ஆபாச நடிகையை கொண்டாடுவதன் மூலம் நீங்கள் உங்கள் மகள்களை விஞ்ஞானி, டாக்டர், என்ஜினியர் ஆகுவதற்கு பதிலாக ஆபாச நடிகையாக கனவு காண ஊக்கப்படுத்துகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தஸ்லிமா

கருத்துகள் இல்லை: