சனி, 9 ஜூன், 2012

T.R.Balu,E.V.K.S.Ilankovan மத்திய அமைச்சராகிறார்கள்

ஸ்டாலின், பிரதமரிடம் கொடுத்த சீட்டில் உள்ள ‘எதிரணி’ இரண்டு பெயர்கள்!


Viruvirupu

டில்லி சென்ற ஸ்டாலின், பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தது பற்றிய சில விபரங்கள் தற்போது டில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது. வழமையாக கருணாநிதி கையாளும் இப்படியான விவகாரங்களை முதல் தடவையாக ஸ்டாலின் ஹான்டில் பண்ணியிருக்கிறார்.
ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாகவே டில்லிக்கு அழைக்கப்பட்டார் என்பதே வெளியே கூறப்படும் பேச்சு. ஆனால், வந்த இடத்தில் ஓசைப் படாமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டு திரும்பினார் என்பதே டில்லி வட்டாரத் தகவல்.
உண்மையில் டில்லி அழைத்திருந்தது கருணாநிதியைத்தான். ஆனால், டில்லி சென்று திரும்ப தனது உடல்நிலை இடம் கொடுக்காது என்று கூறி, ஸ்டாலினை அனுப்பி வைப்பதாக தெரிவித்தாராம். அதையடுத்தே ஸ்டாலின், டில்லி ஹை-கமாண்டை சந்தித்திருக்கிறார்.

எமக்கு டில்லியில் கிடைத்த தகவல்களின்படி, டில்லிக்காரர்களுடன் கருணாநிதி எப்படி டீல் பண்ணுவாரோ, ட்ரெயினிங் எடுத்ததுபோல, அதே ஸ்டைலில் டீல் பண்ணினாராம் ஸ்டாலின். “கூட்டணிக் கட்சி என்ற முறையில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு செய்ய வேண்டிய கடமையை தி.மு.க. செய்யும்” என்று கூறிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.-வுக்கு ‘செய்ய வேண்டியதில்’ குறை வைக்காது என்று தாம் நம்புவதாக கூறினாராம்.
ஸ்டாலின் குறிப்பிடும் ‘செய்ய வேண்டிய கடமை’, தி.மு.க.-வுக்கு கொடுக்க வேண்டிய அமைச்சர் பதவிகளை வழங்குவதுதான் என்பதை பிரதமரும், சோனியாவும் புரிந்து கொண்டனராம். “முதல் கட்டமாக உங்கள் தரப்பில் இருந்து இருவரது பெயர்களை கொடுங்கள். பரிசீலிக்கிறோம்” என்று கூறிய பிரதமர், “சென்னைக்கு போய் ஆலோசித்த பின், பெயர்களை சொல்லுங்கள்” என்றாராம்.
“பெயர்கள் இப்போதே ரெடி” என்று கூறியபடி, பாக்கெட்டில் இருந்து ஏற்கனவே டைப் செய்து வைத்திருந்த இரு பெயர்களை எடுத்து கொடுத்தாராம் ஸ்டாலின்.
இந்த விபரங்களை எமக்கு கூறிய டில்லி சோர்ஸ் சொன்ன மற்றொரு விஷயம்தான் ஆச்சரியமானது. ஸ்டாலின் எடுத்துக் கொடுத்த லிஸ்ட்டில் இருந்த இருவருமே, அவரது ஆதரவாளர்கள் அல்ல என்பதுதான், ஆச்சரியம்.
இப்படிச் சொல்லிவிட்டால், அதில் ஒருவரது பெயரை சுலபமாக ஊகித்து விடுவீர்கள். ஆம்., டி.ஆர். பாலு.
மற்றைய பெயர், ஆச்சரியமானது…  அது, கனிமொழி ஆதரவாளரின் பெயர்! வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், டி.கே.எஸ்.இளங்கோவன்!!
மத்திய அமைச்சராகிரார்கள்  

கருத்துகள் இல்லை: