கொழும்பு மாநகர சபை தேர்தலில் முதற் தடவையாக மனோ கணேசனின் தலமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியில் கணிசமான கொழும்பு வாழ் யாழ். வம்சாவளியினர் இடம்பிடித்துள்ளதாக தமிழ்த் தேசியப் பணிக்குழுவின் சிரேஸ்ட உப தலைவர் த.மனோகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
கொழும்பு வாழ் யாழ். தமிழர்களை தமதாக்கிக் கொள்வதில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தலைவரும் பெரும் சிரமம் எடுத்தனர்.
இதுவரை ஜ.ம.மு யின் பொதுச்செயலாளரும் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமாரகுருபரனும் மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனுமே இருந்துசெயற்பட்டு வந்தனர்.
இம்முறை பிரபல கட்டடக்கலை பொறியியலாளர் லயன் ஷன் குகவரதன், இவர் நவாலியூர் சோமசுந்தரபுலவரின் பூட்டன் என்பதுடன் ஒரு சமூகசசேவையாளர். இவரோடு கொழும்பு தமிழ் சங்க பொருளாளர், சமூகத்தோடும் இலக்கிய உலகோடும் பின்னிப்பிணைந்துவிட்ட எஸ்.பாஸ்கரா, முன்னாள் ரெலோ கூட்டணி பிரமுகர் பத்மநாதன் என்பாருடன் மீண்டும் மாநகரசபையூடாக கடந்த பல ஆண்டுகளாக சேவையாற்றிவரும் வேலணை வேணியனும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் மலையக மக்கள் முன்னணியின் பிரமுகரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கே.தி.குருசாமியும் ஜ.ம .மு யில் இணைந்து போட்டியிடுகின்றார்.
அந்தவகையில் தமிழ் மக்களுக்கான சிறந்த அணியாக குரல் தரவல்ல தமிழ் கூட்டமைப்பாகவும் வல்லமையுள்ள அமைப்பாகவும் இது இருக்கும் என்பது திண்ணம்.
இவர்களை சிவாஜிலிங்கம் நேரில் தேர்தல் காரியாலயத்திற்கு வந்து மாலையிட்டு வாழ்த்தினார். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் வாழ்த்தினார் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக