புதன், 31 ஆகஸ்ட், 2011

நல்லூரில் காதலியை கொலை செய்ய முயன்ற Ex காதலர்


 நல்லூர் ஆலயச் சூழலில் இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நல்லூர் ஆலயத் திருவிழாவிற்கு நேற்றிரவு சென்றிருந்த இளம்பெண்ணை நீர்கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலைசெய்ய முற்பட்டுள்ளார்.

அச்சமயம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி காயங்களுக்குள்ளான நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பைச் சேர்ந்த இளைஞரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதியும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், யுவதி திடீரென அந்த இளைஞரை கைவிட்டு வேறு ஒருவருடன் காதல் தொடர்பை மேற்கொண்டதையடுத்தே ஆத்திரமடைந்த குறித்த நீர்கொழும்பு இளைஞர் அவரைக் கொலைசெய்ய முற்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞர் மீது கொலை முயற்சிக்கான வழக்குப் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: