தூத்துக்குடிக்கு சென்ற கப்பலில் தங்கக் கட்டிகளை கடத்திச் சென்ற பெண் கைது!
இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற கப்பலில் தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டு சென்ற பெண்ணொருவர் புலனாய்வுதுறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சென்ற மேற்படி பெண் ஆசனவாயிலில் தங்கக்கட்டிகளை மறைத்துக்கொண்டுச் சென்றுள்ளார்
புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று காலை கொழும்பில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்த பயணிகள் கப்பலில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்ட பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் ஒருவர் திருச்சி ஐயப்பன் நகரை சேர்ந்த சந்திரலிங்கம் மனைவி கோடீஸ்வரி என்பதும் அவருடன் வந்தவர் கொழும்பைச் சேர்ந்த செல்வநாயகம் மனைவி பார்வதம் என்பதும் தெரிய வந்துள்ளது. தீவிர சோதனையை மேற்கொண்டதையடுத்து கோடீஸ்வரி என்ற பெண் 7 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது. தலா 116 கிராம் வீதம் மொத்தம் ஒரு கிலோ எடையுள்ள 276 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்றி நெருப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக