ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.
பான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.
உலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
செக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்!
இது குறித்து — இந்தத் தொழிலில் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….
“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….
எந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது? இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா? மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன்? சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்?
எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”
போதுமடா சாமி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக