வெள்ளி, 2 செப்டம்பர், 2011

99 கிலோமீற்றர் காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி (காணொளி)



பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வின் வழிகாட்டலில் உலக வங்கியின் 3000 மில்லியன் ரூபாய் செலவில் திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான 99 கிலோமீற்றர் வரையான காபர்ட் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படடுள்ளன.
இந்நிலையில், பாதையின் நடுவே நவீன மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்படடுள்ளன.

இதன் முதற்கட்டமாக காத்தான்குடி நகரசபை பிரிவிலும் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் தற்போது மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 112 வீதியோர மின்விளக்குள் பொருத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகர சபைபிரிவில் 56 மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுவருகின்றன.
இத்திட்டத்திற்கென வீதி அபிவிருத்தி அதிகாரசபை பல மில்லியன் ரூபாய் செலவிட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை: