புலிவேசம் சினிமா : செட்டியார் இனம் ஆவேசம்சேலத்தில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மற்றும் அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் முரளி தலைமை வகித்தார். ஷண்முக சுந்தரம், கணேசன், கேசவன், குமரன், தனகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை மாவட்ட தலைவரும், ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆர்.அரவிந்தன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
புலிவேசம் படத்தில் செட்டியார் இன மக்களை இழிவுப்படுத்தி பேசும் காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக