செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மூவரையும் காப்பாற்ற முடியும்: ராம்ஜெத்மலானி


முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும் என அவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் இன்று வாதாடவுள்ள சட்டத்தரணி ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்பிலானதுமான மனு பரிசீலனையை முன்னிட்டு நீதிமன்றத்திற்கு வந்த சட்டத்தரணி ராம்ஜெத்மலானி ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பேரறிவாளன் சார்பில் சட்டத்தரணி தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் சட்டத்தரணி வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு சட்டத்தரணி தடா சந்திரசேகரன் ஆஜராகி, தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது.

மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த சட்டத்தரணி ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த சட்டத்தரணி மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் நீதிமன்றில் குழுமியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: