வெள்ளி, 28 மே, 2010

தண்டவாளத்தை நக்சலைட்டுகள் அகற்றி சதி.. கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் :



மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தை நக்சலைட்டுகள் அகற்றி சதி வேலையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் கவிழ்ந்தது.   இதில் 100 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.     மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர்.
அகற்றப்பட்ட தண்டவாளத்தின் மீது ரயில் வேகமாக சென்றதால் அதன் 13 பெட்டிகளும் தூக்கி வீசப்பட்டன. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இதில் 100 பயணிகள் பலியாயினர்.   இடிபாடுகளுக்கு இடையே 60க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.    ராணுவத்தின் இரு எம்-15 ரக ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன.
நக்சல்களின் இந்த சதி செயல்களுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.                 சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.             ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை.
இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

சம்பவ இடத்தில் மம்தா:
சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார்.       மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார்.       இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ.      5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு       ரூ.  2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

கருத்துகள் இல்லை: