![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkthg5yV1eFBjr1IdSRhZONnK3xHP9BBCy1F6FLJ0GDzxx6XfygH_INjAqimxkNC9Gt1N_X8SyHF4OLbgTZFV_CmSquNXcNnQ6g7Fj0wcCDyVY4NVC5GiISmS-hhYZOnp-b-KpOrIzUuM/s320/images34536.jpg)
இலங்கை மற்றும் உலகத் தமிழர்களுக்கு இடையே உறவுப் பாலம் ஒன்றை அவர் ஏற்படுத்தி வருவதாகவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,
« நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.
இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக