வியாழன், 27 மே, 2010

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை [^] மாணவிகள் தீக்குளித்து தற்கொலை [^] செய்து கொண்டனர்.

ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி:

கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் [^] தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார்.

ரேங்க் பட்டியல் குளறுபடி-விடுபட்ட விருதுநகர் மாணவி:

முன்னதாக நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியலை அரசு தேர்வுத்துறை அறிவித்தது.

இந்த ரேங்க் பட்டியலில் 15 மாணவ- மாணவிகளின் பெயர் இடம் பெற்றிருந்தன.

விருதுநகர் மாவட்டம் ஏ.வி.எம்.எம்.என். மேல் நிலைப்பள்ளி மாணவி மகேஸ்வரி 493 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் அவரது பெயர் ரேங்க் பட்டியலில் இடம் பெறவில்லை.

இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது. அவர் உடனடியாக சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவி மகேஸ்வரியின் பெயரை ரேங்க் பட்டியலில் 16வதாக சேர்த்து அறிவித்தது தேர்வுத்துறை.

கருத்துகள் இல்லை: