ஞாயிறு, 10 நவம்பர், 2019

சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு 'தங்க தமிழ் மகன்' விருது

தினத்தந்தி : நியூயார்க்: தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுதாகர் தலேலா தலைமையில் உயர் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில், சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை: