செவ்வாய், 12 நவம்பர், 2019

ஊடகங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்ட மக்கள் பிரச்சினைகள்..:List

Velmurugan Balasubramanian :   திமுக மீதான அவதூறுகளுக்கு காட்டும் முயற்சியில் ஒரு சதவீதத்தை இந்த ஊடகங்களும், நடுநிலை வியாதிகளும் ஆளும் கட்சி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு காட்டியிருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு இன்று தீர்வு காணப்பட்டிருக்கும்.
ஊடகங்களால் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்ட மக்கள் பிரச்சினைகள்:
1. சட்டசபையில் ஏக மனங் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா என்ன ஆனது?
2. நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்திற்கான சட்ட நடவடிக்கை என்ன?
3. தமிழ் நாடு அரசு பணிகளில்(TNPSC) பிற மாநிலத்தவர்களை பணியமர்த்தும் சட்ட திருத்தம் செய்து தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியதற்கு என்ன பதில்?
4. தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை பணிகளில் தமிழர்களை தேர்ந்தெடுக்காதது ஏன்?
5. அதிமுக பேனர் விழுந்து இறந்ததற்கு பேனர் வைத்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
6. ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் போலிசாரால் கொல்லப்பட்ட 15 பேருக்கான விசாரணை நிலை என்ன?
7. பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெளியே வந்தது எப்படி?
8. படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?
9. ஆர் கே நகர் பணப்பட்டுவாடா வழக்கு என்ன ஆனது?
10. இளைஞர்களை சீரழிக்கும் குட்கா வழக்கின் நிலை என்ன?
11. 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு என்ன ஆனது?
12. ராதாபுரம் தொகுதி அஞ்சல் வோட்டு முடிவுகளை எப்போது அறிவிப்பார்கள்?
13. கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரத்திற்கு கட்டாயப்படுத்திய நிர்மலா தேவி வழக்கு என்ன ஆனது?

14. ஜெயலலிதா மரணத்திற்கான ஆறுமுகம் கமிஷன் என்ன ஆனது?
15. கொடநாடு கொலைகளின் குற்றவாளி யார்?
இன்னும் பல பிரச்சினைகள். ஆனால், இவை எல்லாவற்றையும் திசைதிருப்ப திமுக மீதும், ஸ்டாலின் மீதும் தினம் ஒரு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
ஊடகங்களும், நடுநிலை போர்வையில் இருப்பவர்களும் இந்த சமூகத்தின் எதிரிகள். ஆளும் கட்சி வீசும் பணத்திற்காக மக்களை பலிகடா ஆக்கி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: