
மெட்ராஸ் ஐஐடியில் நிறுவனக் கொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃபிற்கு நீதி வேண்டி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவர் தலைவரும் , மொழி மற்றும் இலக்கியத்துறை கவுன்சிலருமான அஃப்ரின் பாத்திமா JNU வளாகத்தில் ஆற்றிய ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பு.
ஐஐடி மெட்ராஸ் கல்வி வளாகத்தில் மீண்டெமொரு நிறுவனக் கொலை நடந்திருக்கிறது. ஃபாத்திமா லத்தீஃப் ற்கு நீதிவேண்டி நாம் இங்கே கூடியிருக்கிறோம். 19வயதான பாத்திமா லத்தீஃப் என்ற மானுடவியல் படிக்கும் மாணவி தற்கொலை செய்திருக்கிறார். அவர் மரணிப்பதற்கு முன்பாக தனது கைப்பேசியில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் தனது மரணத்திற்கு முழுக்க காரணம் தனது பேராசியர்கள்தான். அதிலும் குறிப்பாக சுத்ஷன் பத்மநாபன் எனும் மானுடவியல் பேராசிரியர் தான் என்று எழுதியிருக்கிறார். மதத்தின் பெயரால் தனது பெயரை வைத்து பாகுபாடு காட்டியதன் பெயரில் தான் இந்த தற்கொலை நடந்திருக்கிறது. இது ஏதோ தனித்தனியாக எப்போதோ நடப்பதல்ல. முதல் முறையும் அல்ல. தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவெனில் இது ஒரு திட்டமிட்ட நிறுவனக் கொலை. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய வெறுப்பினால் (Islamophobia) தூண்டப்பட்ட ஒரு நிறுவனக் கொலை. மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன. இது ஒரு தெளிவான திட்டமிட்ட இஸ்லாமிய வெறுப்பு நிறுவனக் கொலை.
நிறைய மாணவர்கள் கல்வி வளாகங்களில் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணம் அவர்கள் குறிப்பிட்ட சாதிய, மத,இன, மொழி பின்புலம் கொண்ட ஒரே காரணத்தில்தான். ஏன் நமது தேசத்தில் இது தொடர்ந்து நடக்கிறது..? உயர்சாதி ஆதிக்கம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பரவி கிடக்கிறது. உயர்சாதி பிராமணர்கள் மட்டுமே உயர்கல்வி சார்ந்து படிக்கவும், உச்சபட்ச அதிகாரங்களில் பணி செய்யவும் வேண்டும், தாழ்ந்த சாதி மக்கள், சிறுபான்மையினர், தனித்த அடையாளங்களைக் கொண்ட தேசிய இனக்குழுக்கள் இவர்கள் யாருமே கல்வியிலும், அதிகாரத்திலும் மேல்நோக்கி வரக்கூடாதென திட்டமிட்டே வேலை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்ட தேசிய இனம் போன்றவற்றிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க மாணவர்கள் பல பாகுபாடுகளை சந்திக்கின்றனர். வைவா(VIVA), நேர்காணல்(Interview), மாணவர் சேர்க்கை(Admission) போன்ற தருணங்களில் நிறைய பாகுபாடு காட்டப்படுகிறது.
ஃபாத்திமா வின் மரணம் குறித்து இங்கே மன உளைச்சல், முஸ்லிம் அடையாளம் என்றெல்லாம் பேசப்படுகிறது. முஸ்லிம்கள் இந்தியாவில் 70 வருடங்களாக மன உளைச்சலில் தான் இருக்கிறார்கள். இப்பொழுதாவது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி நாம் விழிப்போடு இருக்க வேண்டும். நாம் நமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஃபாத்திமா தனது மரணத்திற்கு காரணமானவர்களை பற்றி எழுதி வைத்தபின்பும் காவல்துறை அவர்களை விசாரிக்கவோ, சிறையில் அடைக்கவோ காலம் தாழ்த்துகிறது. இந்தியா நீதிக்கான தேசம். ஃபாத்திமாவிற்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்.
நாம் நமது அடையாளத்தின் ஊடாக பிரச்சினை வருமோ என்று அஞ்சுகிறோம், அந்த அடையாளத்திற்காக தலைகுணிந்து மன்னிப்பு கேட்குமளவுக்கு தள்ளப்படுகிறோம்.இனிமேல் நாம் நமது அடையாளத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் நமக்காக நாம் தான் போராட முடியும்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மிக மோசமான பாதைகளை கடந்து வந்திருக்கின்றனர். இப்பொழுதேனும் நாம் நமது அடையாளத்தை சொல்லவில்லையெனில், நாம் யார் என்பதை உரிமை கோரத வரையில் நாம் இங்கே இரண்டாம் தர குடிமக்களின் நிலைக்கு தள்ளப்படுவோம். பாபாரி மஸ்ஜித் தீர்ப்புக்கு நம்மிடம் சொல்வது என்னவெனில் முஸ்லிம்கள் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்கள் தான்.., உங்களுக்கு ஒன்றுமே இல்லை என்ற செய்தியைத்தான்.
நாம் அரசியல் ரீதியிலும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலும் விழிப்படைய வேண்டிய, ஒன்றிணைய வேண்டி நேரம் இதுதான். நாம் நமது போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களாக இஸ்லாமியர்களது வரலாறுகளை பாடத்திட்டங்களில் இருந்து நீக்கி வருகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வரலாறு இல்லை என்ற நிலையை உருவாக்குகின்றனர். ஒருபுறம் அந்தமான் நிக்கோபர் தீவின் விமான நிலையத்திற்கு சாவர்க்கரின் பெயரை சூட்டுவிட்டு மறுபுறம் கான் அப்துல் கபார்கான் கடைத்தெருவின் பெயரை மாற்றுகின்றனர். இவையெல்லாமே ஒரு நவீன வரலாற்று திருட்டைப் போல உள்ளது. இதற்கெதிராக நாம் போராட வேண்டும்.
#ஃபாத்திமாவிற்குநீதிவேண்டும்.
#JusticeForFathima
ஆங்கில உரை: அஃப்ரின் பாத்திமா
(மொழி மற்றும் இலக்கியத் துறை கவுன்சிலர், JNUSU)
தமிழில்: அஹ்மது யஹ்யா அய்யாஷ்
#JusticeForFathimaLatheef
#FathimaLathif
#IITmadrasKilledFathima
#ArrestSudharsanPadmanaban
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக