புதன், 13 நவம்பர், 2019

எடப்பாடியின் கதை ...பங்காளிகளை கொலை செய்துவிட்டு ஊரை விட்டு ஓடி ஒழிந்திருந்த வெல்லமண்டி.... ...

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி ? சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இன்று நூற்றுக்கணக்கான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டி மேய்க்கும், எடப்பாடி பழனிச்சாமி, படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு, வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்தவர்தான் இவர்.
.savukkuonline.com/ : எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றபோது, பலரின் வாயிலும் எழுந்த முணுமுணுப்புகள் “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தார்.   ஆனால் அதே நேரத்தில், தர்மயுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வமோ, ஒரே மாதத்தில் ஐந்து முறை மோடியை சர்வ சாதாரணமாக  சந்தித்து வந்தார்.  ஒரு கட்டத்தில், பிஜேபி மற்றும் மோடியின் நெருக்கடி தாங்காமல், பன்னீர்செல்வத்தோடு இணைவதற்கு ஒப்புக் கொண்டார்.  இணைப்பு விழாவும் நடந்தது .
பிறகு மனங்கள் இணையவில்லை என்று தர்மயுத்த அணியின் எம்பி மைத்ரேயன் தன் மனவருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.  அவ்வப்போது சலசலப்புகள் எழுந்தே வந்தன.   பன்னீர்செல்வமும், அவ்வப்போது, லேசாக பட்டும் படாமல் தன் எதிர்ப்புகளை சாடை மாடையாக தெரிவித்து வந்தார்.


ஆனால் இன்று என்ன நிலைமை தெரியுமா ?   இது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது.   “பொது மேடையில் எடப்பாடியின் காலில் எந்த நேரத்திலும் பன்னீர்செல்வம் விழத் தயாராக இருக்கிறார்” என்பதே.  கேட்கவே மலைப்பாக  இருக்கிறதல்லவா ?
ஆனால் இதுதான் உண்மை.   தன்னை ஏளனமாக எள்ளி நகையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்து, வியப்போடு தன்னை பார்க்க வைக்கும் வகையில், ஒரு தலைச்சிறந்த அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி ?
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி.   பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.  இன்று நூற்றுக்கணக்கான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டி மேய்க்கும், எடப்பாடி பழனிச்சாமி, படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு, வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்தவர்தான் இவர்.
பழனிச்சாமிக்கு செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி.  ஆனால் காலத்தின் கோலத்தை பார்த்தீர்களா ?  எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமைக்கு செங்கோட்டையன் ஆளாகி விட்டார்.

கல்வித் துறையில் இன்று விடப்படும் டெண்டர்களுக்கான கமிஷன் என்ன தெரியுமா ?  31 சதவிகிதம்.  30 சதவிகிதம் அமைச்சருக்கு.  அந்த ஒரு சதவிகிதம் அவர் பிஏவுக்கு.   இது தவிர, டெண்டர் எடுப்பவர்கள் அதிகாரிகளுக்கு தனித்தனியாக கப்பம் கட்ட வேண்டும்.
1991ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, ராஜீவ் அனுதாப அலையில் எம்எல்ஏவாகிறார் புளிமூட்டை பழனிச்சாமி.
Politics have no relation to morals என்ற மாக்கியவல்லியின் கருத்துக்கேற்ப, செங்கோட்டையனுக்கு எதிராகவே அரசியல் செய்யத் தொடங்கினார்.
செங்கோட்டையனும் அவருக்கு எதிராக காய்களை நகர்த்த, 2011 தேர்தல் வெற்றிக்கு பின்னர், மன்னார்குடி மாபியாவிடம் சரணடைந்தார்.   மன்னார்குடிக்கு விசுவாசம் தவறாமல் கப்பம் கட்டுவேன் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகிறார்.
2011ல் அமைச்சரானது முதல், எடப்பாடியின் வசூல் தொடங்கியது.   பலர் ஜெயலலிதா இறந்த பிறகுதான், எடப்பாடிக்கு முதலமைச்சர் ஆசை வந்தது என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள்.   ஆனால் 2011ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சரான உடனேயே எடப்பாடிக்கு முதல்வர் பதவி மீது கண் வந்தது.  எப்படியும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படுவார்.   அப்போது ஏற்படும் இடைக்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று அன்றே உறுதி பூண்டார் எடப்பாடி.


இளவயதில் எடப்பாடி பழனிச்சாமி

ஜெயலலிதாவின் ஊழல் பணங்கள் சில குறிப்பிட்ட அமைச்சர்களிடம் கொடுத்து வைக்கப்படும்.   வாங்கும் லஞ்சத்தில் ஜெயலலிதா / மன்னார்குடி மாபியாவின் பங்கை சம்பந்தப்பட்ட அமைச்சர் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.    எப்போது ஜெயலலிதா கேட்கிறாரோ, அப்போது உடனடியாக பணத்தை தர வேண்டும்.
எடப்பாடியிடமும் அப்படி ஜெயலலிதாவின் பணம் இருந்தது.   எல்லா அமைச்சர்களும், ஜெயலலிதா 100 கோடி கொடுத்தால் அவர் மீண்டும் திருப்பிக் கேட்கையில் அதே 100 கோடியை திருப்பித் தருவார்கள்.  ஆனால், எடப்பாடி திருப்பி அளிக்கையில் 110 கோடியாக அளிப்பார்.  அந்த பத்து கோடி எப்படி கூடியது, அவர் எங்கேயும் முதலீடு செய்தாரா, அல்லது வட்டிக்கு விட்டாரா என்ற கேள்விக்கு பதில்.  இப்படி எங்கேயும் அவர் முதலீடு செய்யமாட்டார்.   அவருடைய சொந்த சொத்துக்களை விற்று, கூடுதலாக பணம் கொடுப்பார்.
ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் மீது எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு.  பண விவகாரத்தில் மிக மிக நேர்மையாக நடந்து கொள்வார் என்பதுதான் காரணம். ஜெயலலிதாவுக்கு பன்னீர் மேல் உள்ள இந்த நன்மதிப்பை கெடுக்க வேண்டும் என்று உறுதி பூணுகிறார் எடப்பாடி.  எடப்பாடி அவரது சதித் திட்டத்தில் கைகோர்த்தது அப்போது எம்பி.வைத்தியலிங்கம்.

அந்த சமயத்தில், ஜெயலலிதா அமைத்திருந்த நால்வர் அணியின் மீது அவருக்கு லேசான அவநம்பிக்கை ஏற்படவும், எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கத்திடம் அளிக்கின்றனர்.   அப்போது, எம்பி வேட்பாளர்களை தனித்தனியே சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைத்தியலிங்கம், ஒவ்வொரு எம்பிக்கும் 3 கோடி ரூபாயை அளித்தனர்.   கட்சி தேர்தல் செலவுக்கு பணம் தருவதை தவிர்த்து, இவர்கள் நமக்கு 3 கோடி ரூபாயை அள்ளித் தருகின்றனரே என்று இன்றும் பல எம்பிக்கள், எடப்பாடிக்கே விசுவாசமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் எல்லாம் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்து வந்தார்.  அதன் அடிப்படையில்தான் 2014 தேர்தல் பிரச்சார பயணத்தில், பன்னீர்செல்வத்தை எப்போதும் உடன் அழைத்துச் சென்றார்.

வைத்தியலிங்கம்
அந்த நம்பிக்கையை உடைத்து, ஜெயலலிதாவின்  கோபத்துக்கு பன்னீர்செல்வத்தை ஆளாக்க வேண்டும் என்பதில் எடப்பாடி மற்றும்  வைத்தியலிங்கம் கூட்டணி உறுதியாக இருந்தது.
2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே, பன்னீர்செல்வம், தனித் தனியாக எம்எல்ஏக்களை சசிகலாவோடு சேர்ந்து, அணி சேர்த்து, கட்சியை கைப்பற்ற முயல்கிறார் என்று பல மொட்டை கடுதாசிகளை எடப்பாடி-வைத்தியலிங்கம் போயஸ் தோட்டத்துக்கு அனுப்புகிறது.   தன் தலைமை மீதும், தன் மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஒரு தலைவன், என்றுமே இது போன்ற அவதூறுகள் குறித்து கவலைப்பட மாட்டான். என்னவென்று விசாரித்து உண்மையை அறிந்து கொள்வான்.  ஆனால், ஜெயலலிதா போல தன் மீதே நம்பிக்கை இல்லாத ஒரு தலைவன், பொய்ச் செய்திகளைக் கூட நம்புவான்.
2015 இறுதியில், எடப்பாடி வைத்தியலிங்கம் ஜோடி பரப்பிய தகவல்களை அப்படியே உண்மை என்று நம்பினார் ஜெயலலிதா.  எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், வைத்தியலிங்கம் – எடப்பாடி ஜோடியிடமே அளித்தார்.  ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.  அதில் ஒருவருக்கு வாய்ப்பு.  3 வேட்பாளர் கேன்டிடேட்களையும் தனித்தனியாக சந்தித்த எடப்பாடி ஜோடி, வேட்பாளராகப் போகும் நபருக்கு 50 லட்சம் முதல் 1 கோடியும், தேர்வாகாத வேட்பாளருக்கு தலா 10 லட்சமும் அளித்தனர்.  அளித்து விட்டு அவர்களிடம் கூறியது, ஜெயலலிதா அவர்களை அழைத்து எப்போதாவது விசாரித்தால், எம்எல்ஏ சீட் வேண்டுமென்றால் 2 கோடி பணம் வழங்கவும் என்று பன்னீர்செல்வம் தங்களிடம் கேட்டதாக கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதில் ஒரு நான்கைந்து பேர், ஜெயலலிதாவிடம் பன்னீர்செல்வம் பணம் கேட்டதாக கூறி விடுகின்றனர்.  கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா.  பன்னீர்செல்வம் ஒரு மாதத்துக்கு வீட்டை விட்டு எங்கேயும் வெளியே செல்லக் கூடாது என்று கூறி விடுகிறார்.  மீண்டும் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்ததும் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.    ஜெயலலிதா, சசிகலா மற்றும், தம்பிதுரை ஆகியோர் பட்டியலை இறுதி செய்கிறார்கள்.  தம்பிதுரை, பன்னீர்செல்வத்துக்கு தேங்காய் மூடி துறையை (இந்து சமய அறநிலையத் துறை) ஒதுக்கலாம் என்கிறார்.  சசிகலாவோ, கால்நடைத் துறை என்கிறார்.  ஆனால் இரு ஆலோசனைகளையும் ஏற்காத ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்கு நிதித் துறையை அளிக்கிறார்.  அந்த சூழலில்தான், எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுப் பணித் துறையும் நெடுஞ்சாலைத் துறையும் தங்கச் சுரங்கங்களாக 2016ல் கிடைத்தது.  ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிக்கப்பட்டு, தெருவில் நின்றிருப்பார்.  ஆனால் அவருக்கு ஏழு கிரகங்களும் உச்சத்தில் இருக்கிறதே !!! என்ன செய்வது ?

மரியாதை உயர்ந்ததே தவிர, முதல்வர் பதவிக்கு, எடப்பாடியின் பெயர் ஒரு நாள் கூட பரிசீலனை செய்யப்பட்டதில்லை.  அதன் காரணமாகத்தான், மிகுந்த விசுவாசமானவராக கருதப்படும், ஓ.பன்னீர்செல்வம்தான், ஜெயலலிதா இறந்த அன்று நள்ளிரவில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின், ஜெயலலிதாவின் பணிப்பெண், சசிகலாவுக்கு முதல்வர் ஆசை வந்ததும், அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.  அதன் பின்னர்தான் மானஸ்தர் பன்னீர்செல்வம், தர்மயுத்தத்தை தொடங்கினார்.
பன்னீர் தர்மயுத்தத்தை தொடங்கிய பின்னர், கூவாத்தூரில் எம்எல்ஏக்கள் அனைவரும்   கூடுகின்றனர்.  சசிகலா குற்றவாளி என்று தண்டனை அறிவிப்பு வெளியிடப் படுகிறது.   அடுத்த முதல்வர் யாரென்று, ஆலோசனை செய்யப்படுகிறது.
அந்த நேரத்தில், கூவாத்தூரில், தங்கமணி, வேலுமணி, வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டணி அமைக்கின்றனர்.  எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணியிடம், தன்னை முதல்வராக்கினால் யாருக்கும் எந்த தொந்தரவும் வராமல், சம்பாதிக்க உதவுகிறேன் என்று கூறுகிறார்.

இதை எப்படி செயல்படுத்துவது என்று ஆலோசித்து, எம்எல்ஏக்களை தூண்டி விடுவது என்று முடிவெடுக்கின்றனர்.
எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர்தான் எடப்பாடியின் பாக்கெட்டுகளில் இருக்கிறார்களே…  அவர்களை வைத்து, லேசாக, முணுமுணுப்பை தொடங்குகிறார்கள்.   எடப்பாடி தளவாய் சுந்தரத்தை அணுகி, அண்ணே, எம்எல்ஏக்கள் ரொம்ப டென்சனா இருக்காங்கண்ணே.   அந்த பக்கம் போயிடப் போறாங்க.  கொஞ்சம் சொல்லுங்கண்ணே என்று கூறுகிறார்.  தளவாய் சுந்தரம், டிடிவி தினகரனிடம் விபரத்தை கூறுகிறார்.

தளவாய் சுந்தரம்
டிடிவி தினகரன் சசிகலாவிடம் ஆலோசனை செய்து விட்டு, உடனடியாக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இது நடந்து கொண்டிருக்கையிலேயே, நெடுஞ்சாலைத் துறை மற்றும், பொதுப் பணித் துறையின் அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, இரு துறைகளின் காண்ட்ராக்டர்களை தனது பிஏவை விட்டு அழைக்கச் சொல்லி, பணத்தை உடனடியாக ரொக்கமாக தயார் செய்து வைக்குமாறு கூறுகிறார்.
ஒரு எம்எல்ஏவுக்கு மூன்று கோடி.  ஒரு கோடி உடனடியாக, மீதம் இரண்டு கோடி, நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு என்று டிடிவியும் சசிகலாவும் முடிவெடுக்கின்றனர்.  செங்கோட்டையனை முதல்வராக்கலாம் என்று முடிவு செய்கின்றனர்.  செங்கோட்டையனை அழைத்து, எவ்வளவு சீக்கிரமாக பணத்தை தயார் செய்ய முடியும் என்று கேட்டதும், தான் முதல்வரான ஏழாவது நாள், முழு பணத்தையும் தன்னால் அளிக்க முடியும் என்கிறார்.  இதை எம்எல்ஏக்களிடம் சொல்லலாம் என்று டிடிவியும், சசிகலாவும் ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, எடப்பாடி, பெல்பாய்ஸ் மற்றும் வைத்தியலிங்கம், எம்எல்ஏக்களை மீண்டும் தூண்டி விடுகின்றனர்.
கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகிறது.   நிலைமை கைமீறிப் போகிறது என்பதை சசிகலாவும் டிடிவி தினகரனும் உணர்கின்றனர்.  என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை.    மத்திய அரசும் மோடியும் தங்கள் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிந்த காரணத்தால், அவர்களாலும் பணத்தை எடுக்க முடியாது.  கொஞ்சம் தாமதித்தாலும், பன்னீர்செல்வம், எம்எல்ஏக்களை வளைத்து எடுத்துக் கொண்டு போய் விடுவார். பன்னீர்செல்வம் மூலமாக பிஜேபி ஆட்சியை பிடித்து விடும் என்பதை உணர்ந்து கவலையோடு கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்த நேரத்தில்தான், தளவாய் சுந்தரம், டிடிவி தினகரனை அணுகி, எடப்பாடி பழனிச்சாமி பணத்தை தயாராக வைத்திருப்பதாக கூறுகிறார்.

எப்படியாவது ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருந்த டிடிவி. தினகரன் மற்றும், சசிகலாவுக்கு இந்த செய்தி தேனாக பாய்கிறது.  உடனடியாக அமைச்சரவையை இறுதி செய்யலாம் என்ற நேரத்தில்தான், எடப்பாடி பழனிச்சாமியும், வேலுமணியும், செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.  அதற்கு அவர்கள் கூறிய காரணம், முக்கிய துறைகளையெல்லாம் கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுத்தால் இதர சமூகத்தினர் ஆத்திரப் படுவார்கள் என்றும், வட தமிழகத்தில் கட்சி பலவீனமாக இருப்பதால், சிவி.சண்முகத்திடம் பள்ளிக் கல்வித் துறையை வழங்கலாம் என்றும் கூறுகின்றனர்.    சசிகலா மற்றும் தினகரனுக்கு, இது நல்ல ஆலோசனையாகவே படுகிறது.  சரி என்று ஒப்புக் கொள்கின்றனர்.  இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகையில், சிவி.சண்முகம் அந்த இடத்தில் இல்லை.
விஷயம் செங்கோட்டையன் காதுக்கு போகிறது.  அவர் அழுதுகொண்டே, கூவாத்தூரில் இருந்து வெளியேற நடந்து செல்கிறார்.   அப்போது, சிவி.சண்முகம்தான் அவரை ஓடிச் சென்று, அண்ணே வாங்கண்ணே என்று அழைத்து வருகிறார்.  சசிகலா அவரை கண்ணீரோடு பார்த்ததும், செங்கோட்டையன் அழாதீங்க.  யாரு சொன்னது நீங்க அமைச்சர் இல்லன்னு என்று கூறி, அவருக்கே பள்ளிக் கல்வித் துறையை அளிக்கிறார்.

சிவி.சண்முகம்
அதன் பின், சிவி.சண்முகத்தை அழைத்த, எடப்பாடி அன்ட் கோ, யோவ், உனக்காகத்தான் நாங்க பேசிக்கிட்டு இருக்கோம், நீயே போயி அந்த ஆளை திரும்ப கூட்டிட்டு வர்ற ? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அப்படித்தான் “படிப்படியாக உழைத்து முன்னேறி” எடப்பாடி முதல்வரானார்.

பழனிச்சாமி படிப்படியாக முன்னேறிய அந்த தருணம்
சமீபத்தில், டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தாரா இல்லையா என்று பலத்த சர்ச்சை எழுந்தது நினைவிருக்கும்.
அதன் பின்னணியிலும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.   தொலைக்காட்சியை திறந்தால், டிடிவி அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச் செல்வன் வீராவேசமாக பேசுவதை பார்த்து இருப்பீர்கள்.  டிடிவி அணியிலேயே சவுண்ட் அதிகமாக விடுபவர் தங்க தமிழ்ச் செல்வன்தான்.
அவர் பெல் பாய்ஸான, தங்கமணியையும் வேலுமணியையும் தொடர்ந்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.  இதெல்லாம் 18 எம்எல்ஏ தீர்ப்புக்கு முன்.  தங்க தமிழ்ச் செல்வனின் நிபந்தனை. அவர் 8 எம்எல்ஏக்களை அழைத்து வருவார்.  ஒரு எம்எல்ஏவுக்கு 10 கோடி.  தங்க தமிழ்ச் செல்வனுக்கு 25 கோடி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் பதவி.   இந்த பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மற்றொரு புறம், டிடிவி தினகரனோடும் தங்க தமிழ்ச் செல்வன் பேசி வந்தார்.    “அண்ணே, எம்எல்ஏஸ் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்கண்ணே.   பேசாம, எடப்பாடி பக்கம் போயிடலாமான்னு சொல்றாங்கண்ணே.  என்னால அவங்களை கன்ட்ரோல் பண்ண முடியலண்ணே” என்று டிடிவி தினகரன் மீது தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறார்.  அப்படி ஒரு பேச்சுவார்த்தையின்போதுதான் டிடிவி, தங்க தமிழ்ச் செல்வனுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக, “பன்னீர்செல்வமே என்னை சந்தித்து பேசினார்.   அவங்களே நம்ப பக்கம் வந்துடுவாங்க.  நீங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க.” என்று கூறுகிறார்.

தங்க தமிழ்ச்செல்வன்
அந்த விஷயத்தை அப்படியே தங்கதமிழ்ச் செல்வன் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லவும்தான் அந்த சர்ச்சையே தொடங்கியது.   தங்க தமிழ்ச் செல்வன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு வசதித் துறை தன்னிடம் இருந்து பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்த பன்னீர்செல்வம், எடப்பாடியின் காலில் விழக் கூட தயாராக இருந்தார் என்கிறார், பன்னீரின் பிஏக்களில் ஒருவர்.  அந்த அளவுக்கு புலம்பித் தள்ளியிருக்கிறார்.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள், தங்கள் எதிர்காலமே டிடிவி.தினகரனால் பறிபோய் விட்டதாக, புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அப்போது, அவர்கள் அனைவருக்கும் போதுமான பணம் வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் கூறினால் அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதால், வைகுண்டராஜனோடு ஒரு சந்திப்பு நடத்தி இந்த வாக்குறுதி 18 எம்எல்ஏக்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.  தற்போது ஒரு வாரமாக, வைகுண்டராஜன் நிறுவனங்களில் நடைபெற்று வரும் வருமான வரிச் சோதனை இதன் தொடர்ச்சியே என்கிறார் ஒரு மத்திய உளவுத் துறை அதிகாரி.

இந்த  வருமான வரி சோதனை தொடங்கியது, 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரும் அதே நாளில்.  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று கூறினால், டிடிவி தினகரனின் அடுத்த நடவடிக்கை, எடப்பாடி தரப்பில் உள்ள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாகத்தான் இருக்க முடியும்  ஏற்கனவே நடந்த சந்திப்போடு இணைத்துப் பார்த்தால், 18 எம்எல்ஏ தீர்ப்பு வந்த பிறகு, டிடிவி தினகரன் பணத்துக்காக அணுகும் முதல் நபராக வைகுண்டராஜன்தான் இருப்பார். இதை மத்திய அரசு எதிர்ப்பார்த்தே, தீர்ப்பு நாளன்று, வைகுண்டராஜனை இங்கே அங்கே நகர விடாமல், சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறுகின்றனர்.  அரசியலில் எதுவுமே, தற்செயல் (coincidence) கிடையாது.  எல்லாவற்குக்கும், பார தூரமான காரணிகள் இருக்கும்.   இந்த வருமான வரி சோதனைகளையும் அப்படி தற்செயல் என்று கருத இயலாது.  ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்காக டிடிவி தினகரனுக்கு வைகுண்டராஜன் 2.5 கோடி லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள், வருமான வரித் துறையிடம் சிக்கியிருப்பதாக, தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.
எடப்பாடி பழனிச்சாமி மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் காலவரையற்ற தடையை வழங்கியுள்ளது.   வழக்கு தொடுத்தவர் திமுகவை சேர்ந்தவர் என்பதை காரணமாக சொல்லி, தடை விதித்திருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.   ஒரு ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி ஊழல் புகார் சொல்லாமல், ஆளுங்கட்சியா சொல்லும் ?  விசித்திரமான தீர்ப்பு அது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று மொக்கையான காரணங்களை சொல்லி, அந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா.
இரட்டை இலை சின்னம், மற்றும் அதிமுக பொதுக் குழு ஆகிய விவகாரங்களில் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் கேசி.பழனிச்சாமியின் மனுவில் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடிக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது. ஆங்கிலத்தில் unstoppable என்று கூறுவார்கள்.   அது போல, எடப்பாடியை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

ஆர். மணி
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமியை குறைத்து மதிப்பிட முடியாது.   ஆனால் அவர் இனி எதிர்கொள்ள உள்ள பாதை, அத்தனை எளிதானது அல்ல.  மிகவும் கடினமானது.  மாநில அரசை விட்டு விடுங்கள்.  மத்திய அரசின், சிபிஐ, வருமான வரித் துறை, அல்லது அமலாக்கப் பிரிவு, தனித் தனியாவோ, அல்லது இணைந்தோ, புலனாய்வு நடத்துமேயானால், எடப்பாடி பழனிச்சாமி பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.
பல நேர்வுகளில் அவர், பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது, வெளிப்படையாகவே தெரிகிறது.  ஆனால், இந்த மத்திய அமைப்புகள் விசாரணை நடத்துமா இல்லையா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ஒரு வேளை, மத்திய அமைப்புகள் விசாரணை நடத்த  ஆரம்பித்தால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்பாராத அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன” என்றார்.
பத்திரிக்கையாளர் மணி சொல்வது மிகச் சரியானது.  2019 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், எந்த கட்சியை எந்த அணியில் சேர்க்கப் போகிறது என்பதை நாம் ஊகிக்கவே முடியாது.  அப்படி அணிகள் சீட்டுக் கட்டை போல கலைத்துப் போடப்பட்டு, மீண்டும் சேர்க்கப்படுகையில், மத்தியில் ஆட்சி அமைக்கும் அணியோடு டிடிவி தினகரனும் இருக்கலாம். திமுகவும் இருக்கலாம்.  அப்போது, இன்று சர்வ வல்லமை பொருந்திய சக்ரவர்த்தியாக வலம் வரும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி இருப்பார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
திமிரோடும், அகங்காரத்தோடும் இருந்த பலரை, காலம் தன் சுழற்சியினுள் எடுத்து, காணாமல் அடித்திருக்கிறது.  எடப்பாடி பழனிச்சாமி அதற்கு விதிவிலக்கா என்ன ? இன்று தன்னையே கடவுளாக கருதிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  ஏன் அப்படி உயர்ந்துள்ளார் என்பதை வள்ளுவர் அற்புதமாக விளக்குகிறார்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

1 கருத்து:

Unknown சொன்னது…

அவரைபற்றி தெரிந்து கொள்ள அருமையான தொகுப்பு இந்த பதிவு