வெள்ளி, 15 நவம்பர், 2019

யார் தமிழர்கள்? என் ஜாதியை கேட்கிறார்கள் .. முனைவர் சுபாஷினி பேட்டி ... வீடியோ


Subashini Thf : லண்டன் IBC Tamil தொலைக்காட்சிக்கு நான் வழங்கிய பேட்டி.
எனது செயல்பாட்டினைத் திரித்து அவதூறு பரப்புகின்ற சில போலி தமிழ்த்தேசியவாதிகளுக்கு எனது பதில்!
இப்பேட்டியில் யூடியூப் பக்கத்தில் சிலர் எனது பேட்டியைச் சிறிதும் கேட்காமல் மிக மோசமாக பின்னூட்டங்களைச் சேர்த்திருக்கின்றனர். தமிழ் மொழியில் நல்ல பண்புள்ள சொற்கள் இருக்கும் போது தரக்குறைவான சொற்களை பயன்படுத்துகின்ற இத்தகையோர் தம்மை திருத்திக் கொள்ளவேண்டியது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் தரக்குறைவாக அவர்களை இழிவு படுத்திப் பேசலாம் என நினைப்போர் நிறுத்தி நிதானித்து எழுத வேண்டியது அவசியம். இப்படி எழுதுவதால் எழுதுபவர்கள் தான் தன்னை அசிங்கப்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களை மிக மோசமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் இவர்களது தலைவர்கள் எத்தகைய
மோசமான நிலையில் சாதி வெறியையும் இனவெறியையும் இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கின்றோம் என்பதையும் இதனால் கெட்டுப்போகும் மனித நல்லொழுக்கத்தையும் பற்றி யோசிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: