செவ்வாய், 11 ஏப்ரல், 2017

இந்திய கடற்படை வீரருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி உள்ளது

;உளவு பார்த்த குற்றச்சாட்டின்பேரில், ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவருக்கு பாகிஸ்தானில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Image caption இந்த காணொளியில் இருப்பவர் இந்திய உளவாளி என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள் பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறி கடந்த ஆண்டு பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக குல்பூஷன் ஜாதவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவுடன், பாகிஸ்தான் வெளியிட்ட காணொளியில், தான் உளவு பார்த்ததை அவர் ஒப்புக்கொண்டதாகத் கூறுவதைப் போல் இருந்தது. அவர் இந்திய பிரஜை என்று கூறியுள்ள இந்திய அரசு, உளவு பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. பலூசிஸ்தானில் பிரிவினைவாதக் கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் பின்னணியில் இருப்பது இந்தியா என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஜாதவ், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறதுbr  BBC.com

கருத்துகள் இல்லை: