
;Karthikeyan: ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் மனைவியுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகளை லைவாக இணையதளத்தில் வெளியிட்ட கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 33 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னுடைய மனைவியுடன் படுக்கையறையில் இருக்கும் ஆபாச காட்சிகளை மனைவிக்கு தெரியாமல் இணையதளம் ஒன்றில் லைவாக வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீடியோ பதிவேற்றியது கேரளாவின், திருச்சூரில் என ஐபி முகவரியை வைத்து தெரிந்து, அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர், நான் இதை பதிவேற்ற வில்லை, வேறொரு இணையதளத்தில் இருந்த வீடியோவை நான் டவுண்லோடு செய்து, இந்த இணையதளத்தில் பதிவேற்றினேன் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் கொடுத்த இணைய முகவரியில், வீடியோ பதிவேற்றம் செய்த ஐபி முகவரியை சோதித்ததில், புகார் அளித்த ஹதராபாத் பெண்ணின் வீட்டில் உள்ள லேப்டாப்பின் ஐபி முகவரியை காட்டியது. இதையடுத்து அவரது கணவரை விசாரித்ததில் உண்மை தெரிந்தது.
அவரது கணவன் தன் மனைவியுடன் செக்ஸில் ஈடுபடும் போது லேப்டாப் மூலம் நேரலையாக செக்ஸ் இணையதளங்களில் பதிவேற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தில், பாலியல் சம்பவங்களை லைவாக வெளியிடும் பழக்கம் கொண்டதாக கூறிஉள்ளார். tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக