திங்கள், 3 நவம்பர், 2025

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் களப்பிரர்கள்- ஆட்சி செய்த (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள்

May be an image of temple and text that says 'น นมร ma pa TΑ yo 14 தமிழக வரலாற்றில் விவ்டன் Seepo களப் களப்பிரர் va காலம் 1a mしよと いり ህ pa Tл ΜyΝ もっもであががいしがでいいしみ டி.கே இரவந்தி ட.கே.இரவீந்திரன் 160T 수0000053'
May be a doodle of ‎map and ‎text that says '‎களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி. வேங்கடசாமி கநர் கிரே ஊகை கொங்கு நார 의 நாரு பல்வவச் காஞ்சி சி .ಕವಿ ொ பான்னி தொண்டி சிறி கரூர் சோழி நாடு 41000 உகையூர் புகார் பாண்டிய ሜበፍ கொற்கை همن குமரிக்டடல் எழும் அவ்ராதபு 949 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்‎'‎‎

 Vimalaadhithan Mani : பிராமணீயத்துக்கு பலமான சாவு மணி அடித்த களப்பிர மன்னர்கள் வரலாறு பற்றிய ஆழ்ந்த வாசிப்பில் நான் அறிந்து கொண்ட வரலாற்று உண்மைகளே இந்த பதிவு .
களப்பிரர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் இந்த களப்பிரர்கள்.
 இவர்கள் ஆட்சி செய்த  (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள் மட்டுமே 
தமிழகம் பிராமணீயத்திலிருந்து விடுபட்ட காலகட்டம். பிராமணீயத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த ஒரே காரணத்திற்காகவே தமிழகத்தை ஆண்ட  களப்பிரர்களின்  ஆட்சி பிராமணீய அடிவருடிகளான 
 வரலாற்று ஆய்வாளர்களால் தமிழகத்தின் இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.


பிராமணீயத்தை உயர்த்தி பிடிக்கும் விதமாக கட்டுக்கதைகளான புராணங்களையும் இதிகாசங்களையும் தானாகவே எழுதிக்கொண்ட பிராமணீயம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின்  அட்டூழியங்களுக்கும் , அர்த்தமே இல்லாத யாகங்களுக்கும் தலையை ஆட்டி சம்மதித்து தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.
தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக பார்ப்பனீய (சமஸ்கிருத) மயமாக்கப்பட்டன. கல்வியும் வர்ணாசிரம தர்மப்படி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. 
உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.
இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது. இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் அசுவமேத யாகம் போன்ற பிராமணீயம் போதித்த யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள். மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக மதமான பிராமணியத்தை ஆதரித்தார்கள். பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது. மனு தர்மம் போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் நாட்டு மக்களிடையே திணிக்கப்பட்டன.
பிராமணியத்தால் ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் பிரதிநிதிகளாக கிளர்ந்தெழுந்த புரட்சியாளர்களே களப்பிரர்கள். 
பார்ப்பனீய திணிப்பால் சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து களப்பிரர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. 
கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் ஆட்சி தொடங்கியது.
தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன. பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது. பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். 
இந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான இப்படி வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. இப்படி பிராமணியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே களப்பிரர் ஆட்சி காலம் தமிழகத்தின் இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.
நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.
அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதங்களாக  இருந்தன. பிராமணீய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன.சங்கமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு பட புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் போற்றி கொண்டாடப்பட்டு மதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதுமே பிராமணீய அடிவருடிகளாக இருக்கும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து செய்து வரும் அயோக்கியத்தனம் .
பிராமணீயத்துக்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், பிராமணீயத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்கள் வரலாற்று ஆய்வு என்னும் பெயரில் தொடர்ந்து செய்யும் அயோக்கியத்தனமான செயல்கள்.
களப்பிரர்கள் ஆட்சி பற்றி உண்மைகளை தெரிந்து கொள்ள பின்வரும் நூல்களை படியுங்கள் :
1. மயிலை சீனி  வேங்கடசாமி எழுதிய " களப்பிரர் ஆட்சியில் தமிழகம் "
2. டி கே ரவீந்திரன் எழுதிய " தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் "
3. நடன காசிநாதன் எழுதிய " களப்பிரர் 

 May be an image of text that says 'புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு ஆ. பத்மாவதி செயதிுாவுதியரலவசடப.ச செம்மொழித் செம்மழித்தமிழாய்வும் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 2021'

 May be an image of text that says 'களப்பிரர் ஆசிரியர் நடன.காசிதா நடன். காசிநாதன் காசி நா தன் எம். எம்., ป பதிவு அலவவர், தொல்பொகுள் ஆய்வுத்துறை'

கருத்துகள் இல்லை: