Ponni Brinda : இதை எத்தனை தடவை சொல்றது அப்படின்னு தெரியல.
ஆனா இஸ்லாமியர்களே இது புரியாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு.
பர்தா அதுவும் முழு முகத்தை மூடுற பர்தா இஸ்லாமிய உடை இல்லை.
அது இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னாடியே அங்க அரபு நாட்டில் இருந்த ஒரு ஆடை..
அந்த நாட்டுல இருந்த பணக்கார பெண்கள் புனிதமானவர்கள் அப்படின்னு காமிக்கிறதுக்காக இந்த மாதிரி திரைக்குப் பின்னால இருப்பாங்க.
ஏழை பெண்கள் இந்த உடையை போட மாட்டாங்க.
(வட இந்திய இந்துக்களிலும் இந்த பழக்கம் இருந்தது).
முகத்தை மறைக்கிற மாதிரி ஆடை போடணும்னு எங்கும் குர்ஆனில் கூட சொல்லலை.
இந்திய இஸ்லாமியர்கள் இந்த உடையை போட்டதும் இல்லை.
தமிழ்நாட்டுல இஸ்லாம் வந்தது எட்டாம் நூற்றாண்டு.
அன்னைக்கில இருந்து 1980 வரைக்கும் இஸ்லாமிய பெண்கள் இந்த பர்தாவை பெருசா போட்டதில்லை.
அதுக்காக அவங்க நிர்வாணமா அலைஞ்சாங்கன்னு அர்த்தமில்லை.
குர்ஆன் சொல்ற மாதிரி modestஆ, மார்பகங்களை மூடுற மாதிரி தலையில் முக்காடிட்டு சேலைகளை/சுடிதார் தான் அணிந்திருந்தாங்க.
அதனால பர்தா போடாத பெண்களை நிர்வாணமாக அலையுறீங்க அப்படின்னு சொல்றது நீங்களே உங்க பாட்டிகள் நிர்வாணமா அலைஞ்சாங்க அப்படின்னு சொல்றதா அர்த்தம்.
இப்படி அறிவு கெட்டத்தனமா பேசி உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்காதீங்க.
1970க்கு மேல எண்ணெய் வளத்தால் பணக்காரரான சவூதி அதோட கலாச்சாரத்தை குறிப்பா உடையை/ மொழியை ஏழை இஸ்லாமிய நாடுகள் மேல திணிக்க ஆரம்பிச்சது. Gulf நாடுகளில் போய் வேலை செஞ்ச பல தமிழ் இஸ்லாமியர்கள் திரும்பி வரும்போது இந்த கலாச்சாரத்தை கொண்டு வந்தாங்க.
குறிப்பாய் இங்க இருக்க மசூதிகளுக்கும் மதராசாக்களிலும் சவுதி பணத்தை தானமா தந்துச்சு.
அதுக்கு நன்றி காட்டும் விதமா இங்கே இருக்கிற இஸ்லாமியர்கள் தாடியை வளர்க்கவும் பர்தா போடவும் மசூதிகள் இஸ்லாமியர்களை ஊக்குவிச்சது.
Sufi கலாச்சாரத்தை கொண்டு இருந்த தமிழ் இஸ்லாமியர்கள் இப்போது காசு அப்படி என்கிற விஷயத்தைகாக வஹாபி கலாச்சாரத்துக்கு மாற ஆரம்பிச்சிட்டாங்க.
இஸ்லாமிய தொலைக்காட்சி, இணையதளங்கள் பர்க்கா = மரியாதை என்ற கருத்து வேரூன்றியது.
இது வெறும் பணக்கார சவுதி கலாச்சார ஆதிக்கம் தான்.
இஸ்லாமிய கலாச்சாரம் இல்லை.
It's just pure saudi cultural imperialism.
இது புரியாம, நம்ம பெண்களை குறிப்பா பள்ளிக்கு போற குழந்தைகளை எல்லாம் பர்தா போட சொல்லி வளர்க்கறது.
வற்புறுத்துறது இஸ்லாமை தூக்கிப்பிடிப்பது ஆகாது.
சவுதி கலாச்சார அடிமை ஆகிட்டிங்கனு அப்படின்னு மட்டும்தான் அர்த்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக