வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பாரிஸ் துப்பாக்கி சூடு போலீஸ் அதிகாரி மரணம் ,.. கொலையாளி தற்கொலை ... இஸ்லாமிய பயங்கரவாதிகள் உரிமை கோரினர்

பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி – மர்ம நபர் தற்கொலை – (அதிர்ச்சி வீடியோ) பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவல் தெரிவித்த பாரீஸ் போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஜோகன்னா பிரிமெவர்ட் கூறுகையில், சுற்றுலாத்துறையின் பிரபல இடத்திற்கு அருகே உள்ள ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் சுரங்கப்பாதை காவல் நிலையத்தை குறிவைத்து மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக கூறினார். 3 நாட்களுக்கு முன்னதாக பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. இந்நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து மர்ம நபர்கள் இருவரை பாரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர். மர்ம நபர் யார் என்பது குறித்த அடையாளம் தெரியவந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட உடனேயே உயிரிழந்தவர்கள் உடல்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள  malaiamalar

கருத்துகள் இல்லை: