வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஆளுநர் ,முதலமைச்சரை தம்பிதுரை சந்திப்பு ... மரியாதை நிமித்தம்னு சொல்லுவாய்ங்களோ?

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று, தமிழக கவர்னர் மற்றும் முதல்வரை, அடுத்தடுத்து சந்தித்து பேசியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து சந்திப்பு: தமிழகத்தில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டுள்ளது; அதை ஒன்றிணைக்க, முயற்சிகள் நடந்து வருகின்றன. இம்முயற்சி பலன் அளிக்குமா; இரு அணிகளும் இணைந்தால், முதல்வர் பதவியில் பழனிசாமி தொடர்வாரா அல்லது முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், புதிய முதல்வராக பொறுப்பேற்பாரா என, பட்டிமன்றம் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். பரபரப்பு: இது குறித்து, அவர் கூறுகையில், ''நான் மரியாதை நிமித்தமாக கவர்னரை சந்தித்தேன்; அவர் என் நண்பர். இதில், அரசியல் முக்கியத்துவம் இல்லை,'' என்றார். பின், தம்பிதுரை, அங்கிருந்து தலைமை செயலகம் சென்றார்; முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து, கவர்னரிடம் பேசிவிட்டு, அவர் கூறிய தகவலை, முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கவர்னர் மற்றும் முதல்வரை, அவர் அடுத்தடுத்து சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமலர்

கருத்துகள் இல்லை: