ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது ... குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை.. ...

புதுடில்லி: குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு விவகாரத்தில் , பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் ஈரானில் வசித்ததாகவும், அங்கிருந்து கடத்தி செல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி கேட்டும், அவரது தீர்ப்பின் நகலை கேட்டும் இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இது குறித்து பாகிஸ்தான் எந்த பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்துள்ள இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக விசா கேட்டவர்களின் விண்ணப்பமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை: