சனி, 22 ஏப்ரல், 2017

வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் கண்டுபிடித்த கண்றாவி ... இதுவுல ஊழல் வேற?

வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ பத்து லட்ச ரூபாய் செலவில் தெர்மோகோல்களை கொண்டு வந்து அணையின் மேல் வைத்ததாகவும் அவை எல்லாம் நீரில் ஊறி கரை ஒதுங்கி வீணாகியதாக K7 Tamil செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியை பார்த்தேன். இது உண்மையா என்று தெரியவில்லை.
இது தொடர்பாக வேறொரு சம்பவத்தை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே பேஸ்புக்கில் எழுதியதுதான். நீர் நாவலிலும் இதை பதிவு செய்துள்ளேன். சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது பால்வளத்துறை அமைச்சர் ரமணா எங்கள் பகுதிக்கு வந்தார். அவருடன் மேலும் சில அதிகாரிகள் வந்திருந்தார்கள். அமைச்சரும் அவருடன் வந்தவர்களும் எங்கள் பகுதியை பார்த்து திகைத்துவிட்டார்கள். இவ்வளவு தண்ணி எப்படி உங்க தெருவுக்குள்ள வந்துச்சு என்று கேட்க நாங்கள் திகைத்துவிட்டோம்.  
அட கூமுட்டைகளா...ஒங்களுக்கெல்லாம் ஐடியா குடுக்குற ஆளு யாருன்னு சொல்லுங்க...  இதுக்கு பேசாம அதிமுகவில இருக்கற எல்லா அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் வைகை அணை மீது படுத்துட்டா நீர் ஆவியாகாமல் தடுக்கலாம்... அவனுக அதுக்காவது பயன் படுராய்ங்களா பாப்பம் ..
அதை நீங்கதான் சொல்லணும் என்று நினைத்துக்கொண்டேன். அவருக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்துடன் எங்கள் பகுதியை பார்த்துவிட்டு சென்று விட்டார். மாநகராட்சியின் மெத்தனத்தால் நாங்களே சிரமப்பட்டு ஹோஸ் சப்மரைன் மோட்டார் உதவியால் நீரை இறைத்து பள்ளமான ராமாபுரம் வழியாக அடையாற்றில் விழும்படி வெளியேற்றி கொண்டிருந்தோம். அவருடன் வந்திருந்த ஒரு அதிகாரி வெள்ளநீர் வடிந்துக்கொண்டிருந்த இடத்தை பார்த்து இங்க பாருங்க எவ்வளவு நீர் வெளியே போகுது.. இங்க மண்ணு மூட்டைகளை வைத்து தடுங்க என்று சொன்னார். இவங்க எல்லாரும் தமாசுக்கு சொல்றாங்களா இல்லை சீரியசாகத்தான் சொல்றாங்களா என்று குழப்பமாக இருந்தது. இப்போது K7 Tamil செய்தியை பார்த்தபிறகுதான் உறுதி செய்ய முடிகிறது. ஒருத்தர் இல்லை.. அங்க இருக்கற எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க.  முகநூல்தகவல்களஞ்சியம்  vinayakan முருகன்

கருத்துகள் இல்லை: