இது தொடர்பான விசாரணை தற்போது தலைமை தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ள நிலையில், டெல்லியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின்படி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் வழங்கியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகேஷ் சந்தரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
யார் இந்த சுகேஷ் சந்தர்?
வங்கி அதிகாரி போல் நடித்து மோசடி செய்து சிக்கியவர் சுகேஷ் சந்தர். ரூ.19 கோடி வங்கி மோசடி புகாரில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்தர். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சுகேஷ் சந்தர் 8 மொழிகள் பேசக்கூடியவர். இவர் மீது இந்தியா முழுவதும் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் 100-க்கும் மேற்பட்ட புகார்களும் உள்ளன மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக