அதிமுகவில் இவர் ஒருவர்தான் உண்மையை பேசி உள்ளார் ... நிச்சயமாக பிரதமர் மோடிக்கு இதில் ஏதோவொரு ரோல் இருக்கிறது ! பாதுகாப்பு படைகளின் புரோட்டோகால் எல்லாவற்றையும் உதாசீனம் செய்வது சசிகலாவால் சாத்தியமே இல்லை .. மோடியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கிறது .. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கூட விசாரிக்கவேண்டும்
சத்தியமாக ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கிறேன் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். 60 நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
எய்ம்ஸ் மத்திய அரசின் மருத்துவமனையும் கூட. மத்திய அரசையும் விசாரணைக்கு கூப்பிடுவீர்களா? ஓபிஎஸ்ஸை விசாரணைக்க கூப்பிட வேண்டும். லண்டன் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். சிங்கப்பூர் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். மோடியை விசாரணைக்கு கூப்பிடுங்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள். 60 நாட்கள் முதல்வராக இருக்கும் போது மர்மம் தெரியவில்லை. இப்போது மட்டும் மர்மம் தெரிகிறதா? இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக